புதன், 8 மே, 2019

மே 21ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்? ராகுல்-நாயுடு மெகா பிளான்

எதிர்க்கட்சி கூட்டம் tamil.oneindia.com - VelmuruganP.: டெல்லி: மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் டெல்லியில் வரும் 21ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம்தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மீதி உள்ளது. அதுவும் வரும் மே 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மே 21 ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது விவிபாட் வாக்கு ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவதை அதிகரிப்பது குறித்து விவாதித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




எதிர்க்கட்சி கூட்டம்

இதேபோல் மே 21ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெல்லிக்கு அழைத்து, தேர்தல் முடிவுக்கு முன்பாக கூட்டணி குறித்து பேசிவிடலாம் என சந்திரபாபு நாயுடுவும் ராகுல் காந்தியும் விவாதித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



ராகுல் பிரதமராக

ராகுல் காந்தியை பிரதமராக்க திமுக தலைவர் ஸடாலின், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் விரும்புகின்றனர். அதேநேரம் இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் சமாஜ்வாதியின் மகா கூட்டணியும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவர்களை எல்லாம் அழைத்து, கூட்டணி குறித்து தேர்தல் ரிசல்ட்க்கு முன்பு விவாதிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு விரும்புகிறார்.



மம்தாவை சந்திக்கும் நாயுடு

இந்நிலையில் மே 21ம் தேதி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு விரும்புகிறார். இதற்காக அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதேதபோல் மற்ற தலைவர்களையும் சந்திப்பார் என தெரிகிறது

கருத்துகள் இல்லை: