தினமலர் : சென்னை : சென்னை, கோயம்பேடு அருகில் நேற்று (மே.5) இரவு இரு
நபர்களுக்கிடையில் போதையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது. அதில்,, கீழே
விழுந்த நபர் இறந்துவிட்டார். இந்தக் கொலை சம்பந்தமாக கோயம்பேடு போலீசார்
விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் அவரை விடுவித்தனர்.
போதையில் தள்ளிவிட்டதாக கருதப்பட்ட நபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிருபாவிடம் தொடர் விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
ஜெ. பிரான்சிஸ் கிருபா, தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார். இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
சம்பவத்தில் இறந்து போன நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றொரு தகவலையும் கோயம்பேட்டில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக