மாலைமலர் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக
மேற்கொண்டு புயலின் போது உயிர் சேதங்களை குறைத்த இந்தியாவுக்கு ஐ.நா.
பேரிடர் குறைப்பு முகமை பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான பானி புயல் தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி சென்றது. ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் பானி புயல் கரையை கடந்தது.
புரி, புவனேஷ்வர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. மின் வினியோகம் பாதித்து, வீடுகள் இருளில் மூழ்கின. சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
மாநில அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பாக செயல்பட்டு உயிர் சேதத்தை குறைத்த ஓடிஷா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு முகமை பாராட்டு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக