வியாழன், 9 மே, 2019

மெக்காலே பிரபுவின் கல்வி புரட்சி .. பார்ப்பன இந்து மனு சட்டத்தை அடித்து நொறுக்கிய மேதை!


பார்ப்பானுக்கு மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும் . சத்திரியனுக்கு  மட்டுமே நிலம் வைத்திருக்க  உரிமை உண்டு எனவும்  வைசியனுக்கு மட்டுமே வியாபாரம் செய்யும் உரிமை உண்டு எனவும் . சூத்திரன் இவர்களுக்கு அடைமையாக இருந்து வேலைசெய்ய வேண்டும் எனவும் என்றிருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிட்டீஷார் ஏற்றுகொள்ளாமல் . சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
அதன் விளைவாக சத்திரியர் மட்டுமே சொத்து வைத்திருக்கலாம் என்ற சட்டத்தை 1995 ஆம் ஆண்டு  மாற்றி அனைவரும் சொத்து வைத்திருக்கலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்தியது
1804 ஆம் ஆண்டில் பெண் சிசு கொலைக்கான தடுப்புக்கான  அரசாணை வெளியிடப்பட்டது.
1813  இல் கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பார்ப்பன பெண்ணை கெடுத்த சூத்திரன் கொல்லப்படவேண்டும் இந்து மத சட்டம் 384/7 இல் ..
ஒரு பார்ப்பனன் காம இச்சை கொண்டு ஒரு சூத்திர பெண்ணோடு உறவு கொள்ளலாம் ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதே ஆகும் இந்து மதசட்டம் 9 இல் 178.
பார்ப்பனர்கள் குற்றம் செய்துவிட்டால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில் அவர்களும் தண்டனை பெறுவதற்கான சட்டம் பிரிட்டீஷாரால்  1817 கொண்டுவரப்பட்டது.
சூத்திரப்பெண் திருமணம் செய்த அன்றே பார்ப்பனர்களுக்கு பணிவிடை செய்ய ஏழு நாட்கள் கோயிலில் இருக்கவேண்டும் ( கணவனோடு அல்ல) இது பிரிடீஷாரால் 1819 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது .
பார்ப்பனன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற மனு தர்ம சட்டம் 1835 ஆண்டு lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக சூத்திரனும் கல்வி கற்கலாம் என்ற அரசானை வெளியிடப்பட்டது

( துக்ளக் சோ போன்ற பார்ப்பன வெறியர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மெக்காலேயின் கல்விதான் இந்தியாவின் இன்றய குழப்பங்களுக்கு காரணம் என்று கூறுவதன் ரகசியம் இதுதான்)
 சூத்திரனுக்கு பிறக்கும் முதல் குழந்தையை கங்கா தானம் என்ற பெயரில் கங்கை நதியில் தள்ளி விட்டு கொல்லும் கொடுமையை நீக்கும் பிரிட்டீஷ் அரசானை  1735 இல் வெளியிடப்பட்டது.
1735 இல் சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்கு அனுமதிக்கும்  அரசாணை கொண்டுவரப்பட்டது .
1868 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசாங்கம் இந்து மத சட்டத்தை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தது.
கணவன் இறந்தால் அவனது பிணத்தோடு மனைவியும் நெருப்பில் குதித்து இறந்து போகவேண்டும் என்ற மனு தர்ம சட்டடத்தை ஆங்கிலேயர் தடைசெய்த வருடம் 1829 டிசம்பர் 4 !
இந்தியாவை மட்டும் ஆங்கிலேயர் ஆளவில்லை என்றால் சூத்திரர்களுக்கு  கல்வி இல்லை . ஆங்கிலேயர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
கொஞ்சம் அவசரப்பட்டுத்தான் சுதந்திரம் வாங்கி விட்டோம் இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்

1 கருத்து:

Unknown சொன்னது…

சிறப்பு .