தினத்தந்தி :அதிமுகவுடன் இணைந்து செயல்பட
விருப்பம் - ஜெ.தீபா பேட்டி:
சென்னை, அப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அதில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜெ.தீபா, அதிமுக மாபெரும் இயக்கம் எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கட்சியை வளர்த்ததாகவும் குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என குற்றம்சாட்டிய அவர், தமிழக மக்கள் அவர்களை விரட்டி ஒதுக்கி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் முழுமையாக உண்மையை வெளியே கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.< இதுமட்டுமல்லாமல், தொண்டர்களின் ஆதரவுடன் ஒரு சிறிய இயக்கத்தை நடத்தி வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளாக ஆதரவு தந்ததற்கு நன்றி எனவும் ஜெ. தீபா தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து ஜெ.தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பல வியூகங்கள் வகுக்கப்பட்டுவரும் நிலையில், அதிமுகவினருக்கு ஜெ.தீபா ஆதரவளித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம். தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்றார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பல வியூகங்கள் வகுக்கப்பட்டுவரும் நிலையில், அதிமுகவினருக்கு ஜெ.தீபா ஆதரவளித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக