விகடன் :
மாதவிடாய் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இன்றளவும்
தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. இது தொடர்பாக விழிப்பு உணர்வுகள்
ஏற்படுத்தியும், தனிமைப்படுத்தும் நடைமுறை நீங்கியபாடில்லை. குறிப்பாக
கிராமங்களில் புற்றீசல்கள் போல பெருகிக்கொண்டேயிருக்கிறது.
இதனால், உடல்சார்ந்த பிரச்னைகளுடன், மனதளவிலும் பெருமளவில் பெண்கள்
பாதிக்கப்படுகின்றனர். தீண்டாமையின் மற்றொரு வடிவமாகத்தான், மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தும் நிகழ்வு உருவெடுத்து நிற்கிறது. பரம்பரை
பரம்பரையாக தொடர்வதற்கு வீட்டிலிருக்கும் மூதாதையர்கள் முக்கிய காரணம்.
வழிவழியாக கடைப்பிடிக்கும் இந்த நடைமுறையால்தான் நேபாளத்தில் மூன்று
உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பொதுவாக நேபாளத்தில் பெண் மாதவிடாய் அடையும்
காலங்களில், சுத்தமற்றவர் என்று கூறி அவர்களை தனிமைப்படுத்தியும், வீட்டை
விட்டு ஒதுக்கி வேறொரு இடத்தில் தங்க வைக்கும் வழக்கமும் இருந்துவருகிறது.
இந்த வழக்கம் `சஹௌபாடி' என்று அழைக்கப்படுகிறது.
சனி, 12 ஜனவரி, 2019
மாதவிடாய் காலத்தில் 2 குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட தாய்! - 3 பேரும் உயிரிழந்த சோகம்
விகடன் :
மாதவிடாய் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இன்றளவும்
தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. இது தொடர்பாக விழிப்பு உணர்வுகள்
ஏற்படுத்தியும், தனிமைப்படுத்தும் நடைமுறை நீங்கியபாடில்லை. குறிப்பாக
கிராமங்களில் புற்றீசல்கள் போல பெருகிக்கொண்டேயிருக்கிறது.
இதனால், உடல்சார்ந்த பிரச்னைகளுடன், மனதளவிலும் பெருமளவில் பெண்கள்
பாதிக்கப்படுகின்றனர். தீண்டாமையின் மற்றொரு வடிவமாகத்தான், மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தும் நிகழ்வு உருவெடுத்து நிற்கிறது. பரம்பரை
பரம்பரையாக தொடர்வதற்கு வீட்டிலிருக்கும் மூதாதையர்கள் முக்கிய காரணம்.
வழிவழியாக கடைப்பிடிக்கும் இந்த நடைமுறையால்தான் நேபாளத்தில் மூன்று
உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பொதுவாக நேபாளத்தில் பெண் மாதவிடாய் அடையும்
காலங்களில், சுத்தமற்றவர் என்று கூறி அவர்களை தனிமைப்படுத்தியும், வீட்டை
விட்டு ஒதுக்கி வேறொரு இடத்தில் தங்க வைக்கும் வழக்கமும் இருந்துவருகிறது.
இந்த வழக்கம் `சஹௌபாடி' என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக