nakkheeran.in raja@nakkheeran.:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவில் உள்ளது காம்பட்டு
கிராமம். இந்த கிராமத்தில் சிறிய அளவில் மளிகை கடை வைத்திருப்பவர் விவசாயி
கார்த்திகேயன். 30 வயதாகும் கார்த்திகேயனுக்கு ராஜஸ்ரீ என்கிற ராஜேஸ்வரி
என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமமாகி குழந்தையில்லாமல் இருந்தனர் இந்த தம்பதியினர். ஓராண்டுக்கு முன்பு ராஜஸ்ரீ என்கிற ராஜேஸ்வரி கர்ப்பமாகியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சர்வேஸ்வரன் என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜனவரி 5ந்தேதி இரவு போதையில் வீட்டுக்கு வந்த கார்த்திகேயன், சாப்பிட்டுவிட்டு மனைவி, குழந்தையோடு ஹாலில் படுத்துள்ளான். இரவு 11 மணியளவில் மனைவிக்கும், தனக்கும் இடையே படுத்திருந்த குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளான்.
குழந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியான தாய் ராஜஸ்ரீ, மார்பிலேயே அடித்துக்கொண்டு கத்தி அழத்துவங்க அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துப்பார்த்து அதிர்ச்சியாகினர். தப்பி ஓட பார்த்தவனை பிடித்து அடித்து உட்காரவைத்தனர்.
உடனடியாக வானாபுரம் காவல்நிலையத்துக்கு தகவல் தந்தனர். அங்கிருந்து வந்த போலிஸார் கார்த்திகேயனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, நான் 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இல்லாதபோது சில மருத்துவர்களை போய் பார்த்தேன், அவர்கள் எனக்கு குழந்தை பிறக்காது என்றார்கள். அப்படியிருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்கும். என் மனைவியின் நடத்தை மீது எனக்கு சந்தேகமிருந்தது. இது உன் குழந்தையில்லடா என ஊரில் பலரும் கிண்டல் செய்தனர்.
அதனால் அந்த குழந்தையை பார்க்கும்போதுயெல்லாம் இது என் குழந்தையில்லை என தோன்றியது. அந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை என்கிற சந்தேகம் வலுத்தது. யாருக்கோ பிறந்த குழந்தை என் சொத்துக்கு சொந்தம் கொண்டாடுவதா என்கிற கோபம் வந்தது. அதனால் வீட்டில் இருந்த அருவாளை எடுத்து வெட்டினேன். குழந்தையின் ரத்தம் என் மனைவியின் மீது பட்டு தெளித்து அவள் எழுந்து கதறினாள். வீட்டுக்குள் இருந்த என் அப்பா ஓடிவந்து பார்த்து என்னை தடுத்தார் என்று கூறியுள்ளான். இதைக்கேட்டு போலிஸார் அதிர்ச்சியாகி அவனை ஜனவரி 6ந்தேதி மதியம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார் கார்த்திகேயன். இவனது அண்ணன் தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். அப்படியிருக்க குழந்தைக்கு யார் அப்பா என்பதை மருத்துவம் சுலபமாக கண்டறிந்து தரும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. சந்தேகம் இருந்தால் அதன்வழியே பரிசோதித்திருக்கலாம், தவறான வழியில் பிறந்திருந்தால் மனைவியை விவாகரத்து செய்திருக்கலாம், இப்படி சட்டம் பல வழிகளை தந்துள்ள நிலையில், ஒன்றும் அறியாத 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை படுகொலை செய்துள்ளான் படுபாவி என்கின்றனர் அக்கிராம மக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக