.vikatan.com/author/456-jayavel-அபினேஷ் தா :
சட்டமன்றத் தேர்தலுக்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தைச்
செயல்படுத்தியது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க சார்பில்
ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். கடந்த 9-ம்
தேதி திருவாரூரில் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஒவ்வொரு கிராமமாகச் சென்று
மக்களைச் சந்தித்து வருகிறார்.
திருப்போரூர் அடுத்துள்ள இள்ளலூர் கிராமத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கிராம சபைக்
கூட்டத்தை தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்வரிசையில்
பெண்களை உட்கார வைத்திருந்தார்கள். இன்று மாலையில் தொடங்கிய கிராம சபைக்
கூட்டத்துக்கு வந்த ஸ்டாலின், ``தற்போதுள்ள சூழலில் எம்.பி தேர்தல்
நடைபெற்றால் மட்டும் போதாது. தமிழகத்தில் ஆட்சியை மாற்ற,
சட்டமன்றத் தேர்தலும் விரைவில் வர வேண்டும். விரைவில் அடுத்து தி.மு.க
ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில்
இருக்கக் கூடியவர்கள் தமிழகத்தைக் குட்டிச்
சுவராக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கமிஷன் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆட்சி
அமைக்க 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், அந்த அளவுக்கான எம்.எல்.ஏ-க்கள்
அ.தி.மு.க-வில் இல்லை. இந்த ஆட்சியை மத்திய அரசு கலைத்திருக்க வேண்டும்.
ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாத அளவுக்கு டெல்லியில் இருக்கும் மோடி அரசு
முட்டுக் கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க
ஆட்சிக்கு வர முடியாது. இதனால் அ.தி.மு.க-வை வைத்து ஆட்சியை நடத்திக்
கொள்ளலாம் என டெல்லி பா.ஜ.க நினைக்கிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து தனக்கென அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அமர்ந்து மக்களிடம் குறைகளைக் கேட்கத் தொடங்கினார். பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து கிராமத்தில் உள்ள பிரச்னைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். ``ரோடு ஒரே குண்டும் குழியுமா இருக்குதய்யா, இந்த ஊருக்கு நல்ல ரோடு வேண்டும்; குடிக்கத் தண்ணியே இல்லை… காலி குடத்தைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவா அலையுறோம்; இந்த ஊருக்கு எரிமேடையே இல்லை. ஊரில் ஆடு மாடு போவதற்கு வழியில்லை. 100 நாள் வேலைக் கிடைப்பதில்லை. பொங்கல் பரிசு 1,000 ரூபாய் இன்னும் கொடுக்கவில்லை” என ஒவ்வொரு பெண்களாகப் பிரச்னைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். ஒரு பெண் பிரச்னைகளைப் பாட்டாகப் படித்தார். இதனால் கிராம மக்கள் மத்தியில் ஒரே சிரிப்பலை எழுந்தது.
அடுத்துப் பேசிய பெண் ஒருவர், “நிறைய பேர் மது குடிக்கறாங்க அதனால மதுவை நிறுத்துவோம்னு சொன்னீங்க… இப்ப இருக்குற ஆட்சியில கொஞ்ச நாள் மூடிய கடைகளைத் திரும்பவும் திறந்துட்டாங்க. இதற்கு எங்களால் ஒரு நிரந்தர தீர்வு காண முடியல. நீங்க முதல்வரா வந்தா, உங்களால் இதற்குத் தீர்வு காண முடியுமா? சொல்லுங்கய்யா…” என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அந்தப் பெண் பேச்சை நிறுத்தாமல் கோபமாக, “எல்லோரும் சிரிக்கறாங்க… இந்த மதுவால நாங்க குழந்தைகளை வைத்துக்கொண்டு அழுகிறோம். உங்களால் நிறுத்த முடியுமாய்யா… சொல்லுங்கய்யா…” என விடாமல் திரும்ப திரும்ப அழுத்தமாகக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ``நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்னு தேர்தல் உறுதி மொழி கொடுத்திருக்கிறோம். நீங்க படித்துப் பார்தீங்களா?’’ என்றார்.
இதைத் தொடர்ந்து சில ஆண்களும் இள்ளலூர் கிராமத்தின் குறைகளைச்
சொன்னார்கள். தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின். “இந்தக் கூட்டத்தில் பேசிய
பெண்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பது தெரிகிறது. யாரும்
தனிப்பட்ட பிரச்னையைப் பற்றி பேசவில்லை. மத்தியில் மோடி ஆட்சி நடைபெற்று
வருகிறது. அதை மோடி ஆட்சி என்று சொல்ல முடியாது; கார்ப்பரேட் ஆட்சி.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலைக்கூட நடத்த முடியாத திறன் இல்லாத
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால்
உங்கள் ஊருக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருப்பார்கள். உங்கள்
பிரச்னைகள் தீர்ந்திருக்கும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலை
முதலில் நடத்துவோம்” என்றார்
இதைத் தொடர்ந்து தனக்கென அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அமர்ந்து மக்களிடம் குறைகளைக் கேட்கத் தொடங்கினார். பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து கிராமத்தில் உள்ள பிரச்னைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். ``ரோடு ஒரே குண்டும் குழியுமா இருக்குதய்யா, இந்த ஊருக்கு நல்ல ரோடு வேண்டும்; குடிக்கத் தண்ணியே இல்லை… காலி குடத்தைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவா அலையுறோம்; இந்த ஊருக்கு எரிமேடையே இல்லை. ஊரில் ஆடு மாடு போவதற்கு வழியில்லை. 100 நாள் வேலைக் கிடைப்பதில்லை. பொங்கல் பரிசு 1,000 ரூபாய் இன்னும் கொடுக்கவில்லை” என ஒவ்வொரு பெண்களாகப் பிரச்னைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். ஒரு பெண் பிரச்னைகளைப் பாட்டாகப் படித்தார். இதனால் கிராம மக்கள் மத்தியில் ஒரே சிரிப்பலை எழுந்தது.
அடுத்துப் பேசிய பெண் ஒருவர், “நிறைய பேர் மது குடிக்கறாங்க அதனால மதுவை நிறுத்துவோம்னு சொன்னீங்க… இப்ப இருக்குற ஆட்சியில கொஞ்ச நாள் மூடிய கடைகளைத் திரும்பவும் திறந்துட்டாங்க. இதற்கு எங்களால் ஒரு நிரந்தர தீர்வு காண முடியல. நீங்க முதல்வரா வந்தா, உங்களால் இதற்குத் தீர்வு காண முடியுமா? சொல்லுங்கய்யா…” என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அந்தப் பெண் பேச்சை நிறுத்தாமல் கோபமாக, “எல்லோரும் சிரிக்கறாங்க… இந்த மதுவால நாங்க குழந்தைகளை வைத்துக்கொண்டு அழுகிறோம். உங்களால் நிறுத்த முடியுமாய்யா… சொல்லுங்கய்யா…” என விடாமல் திரும்ப திரும்ப அழுத்தமாகக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ``நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்னு தேர்தல் உறுதி மொழி கொடுத்திருக்கிறோம். நீங்க படித்துப் பார்தீங்களா?’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக