tamil.indianexpress.com: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் உயர் பிரிவினருக்கு... Upper Caste Reservation in India: உயர் பிரிவினர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் உயர் பிரிவினர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை அளித்துள்ளதாக தகவல்கள் உறுதி செய்கின்றன.
இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது. இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பதால் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொடுக்கப்பட உள்ளது. இதன்படி,
ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர்,
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போர்,
1000 சதுர அடிக்கு குறைவாக வீடு வைத்திருப்போர்,
நகரப் பகுதியில், சில குறிப்பிட்ட மாநகராட்சியில் 900 சதுர அடிக்கும் குறைவாகவும், சில மாநகராட்சிகளில் 1800 சதுர அடிக்கும் குறைவாக வீடு வைத்திருப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர ஓபிசி பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக