செவ்வாய், 8 ஜனவரி, 2019

காகிதப்பைத் தயாரிப்பாளர்… – நம்பிக்கை விதைக்கும் கோவை இளைஞர்!

காகிதப்பை தயாரிப்பு ஆலைசேல்ஸ் மேன் டு காகிதப்பைத் தயாரிப்பாளர்... - நம்பிக்கை விதைக்கும் கோவை இளைஞர்!BBC :சேல்ஸ் மேன் டு காகிதப்பைத் தயாரிப்பாளர்… – நம்பிக்கை விதைக்கும் கோவை இளைஞர்!">சேல்ஸ் மேன் டு காகிதப்பைத் தயாரிப்பாளர்… – நம்பிக்கை விதைக்கும் கோவை இளைஞர்! >இரா. குருபிரசாத்- கே.அருண் பிளாஸ்டிக்கு மாற்றாக என்னென்ன பொருள்களை எல்லாம் பயன்படுத்தலாம்?, பிளாஸ்டிக்கை நம்பியிருக்கும் வியாபாரிகளுக்குச் சரியான மாற்று போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை” போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இருந்து வருகின்றன.
மிழக அரசு அறிவித்தபடியே, பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், “மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து, ஒன்றாக இணைந்துவிட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களுக்கு மாற்றாக, என்னென்ன பொருள்களை எல்லாம் பயன்படுத்தலாம்?, பிளாஸ்டிக்கை நம்பியிருக்கும் வியாபாரிகளுக்குச் சரியான மாற்றுத் தொழில் போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை” என்பன போன்ற குற்றச்சாட்டுகள் மாநிலம் முழுவதும் பரவலாக எழுந்தவண்ணம் உள்ளது. துணிப்பை, கட்டைப்பை, காகிதப்பை, பாக்கு மட்டைகளால் ஆன பைகள் என்று பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பைகள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளன. அந்த வகையில் தற்போது காகிதப்பை வியாபாரத்தைக் கடந்த 8 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஹரிதாஸ்.


ஹரிதாஸ் - காகிதப்பை உற்பத்தியாளர்
காகிதப்பை
கோவை கே.என்.ஜி. புதூர் பிரிவில் இருக்கும் ஹரிதாஸின் பேப்பர் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்றோம். மிஷின் மற்றும் ஊழியர்களின் உழைப்பில் காகிதப்பைகள் வேகவேகமாகத் தயாராகிக்கொண்டிருந்தன.
ஹரிதாஸிடம் பேசினோம். “என்னுடைய சொந்த ஊர் பாலக்காடு. வணிகவியல் படித்து விட்டு 13 ஆண்டுகள் வெளிநாட்டில்  சேல்ஸ் மேனாக வேலை செய்துகொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இளம் வயதிலேயே இங்கு தொழில் தொடங்க விரும்பினேன். என்னுடைய மாமனார் பேப்பர் கவர்கள் தயாரிக்கும், மிஷினை உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார். அப்போதுதான், காகிதப்பைக்கு அதிக தேவை இருப்பதை உணர முடிந்தது. இது சம்பந்தமாக சில ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதே நேரத்தில், இந்தத் தொழிலில் மிகக்குறைவான நபர்களே பேர் சொல்லும் வகையில் இருப்பதும் தெரியவந்தது.

கனரா வங்கியில் கடன் பெற்று, சீனாவிலிருந்து சிறந்ததொரு மிஷினை வாங்கினோம். 20 நாள்கள் அங்குத் தங்கியிருந்து பயிற்சி எடுத்தோம்.  இங்கு வந்து நாங்களே மிஷினை ஓட்டிப் பார்த்தோம். சீனாவில் இருந்தும் ஒருவர் இங்கு வந்து எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பல்க் ஆர்டர்கள் எடுத்தால்தான் வியாபாரம் செய்ய முடியும் என்பதை உணர்ந்தோம். பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில்தான், காகிதப்பைகளுக்கு  அதிக டிமாண்ட் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அதில் பல நிறுவனங்கள் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டவை. பெங்களூரு சென்று பல நிறுவனங்களை அணுகினோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் ஆர்டர் கிடைத்தது. முதன்முதலாக இருபத்தைந்தாயிரம் பைகள் அடித்துக் கொடுத்தோம். அவர்கள் மூலமாக அடுத்தடுத்த ஆர்டர்கள் கிடைத்தன.

8 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது எங்களின்  நிறுவனத்தில் 17 பேர் பணியாற்றி வருகின்றனர். 8 மணி நேரத்தில் இருபதாயிரம் பைகளை தயாரித்து வருகிறோம். துணி மற்றும் கட்டைப்பைகளை விட இது விலை குறைவு. எளிதில் மக்கும் தன்மை கொண்டதால் சூழலுக்கும் மிகவும் ஏற்றது. பைகளுக்கான கைப்பிடியையும் காகிதத்தில்தான் தயாரிக்கிறோம். ரீ-சைக்கிள் பேப்பர்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சராசரியாகப்  பெயர் இல்லாமல் ஒரு பைக்கு ரூ.4 மற்றும் பெயருடன் ரூ.8 கட்டணமாகிறது. காகிதப்பைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி இருக்கிறது. எனவே, இதற்கான ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைக்கவேண்டும். பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு காகிதப்பைக்குத் தேவை அதிகரித்து வருகிறது. அடுத்தகட்டமாக இரண்டு ஷிப்ட் அடிப்படையில் பைகள் தயாரிக்க உள்ளோம். பிளாஸ்டிக் வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்” என்றார்.
காகிதப்பை
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழித்தால் மட்டும் போதாது. அண்டை மாநிலங்களில் அவற்றின் பயன்பாடு தொடர்ந்தால், தமிழகத்தில் மட்டும் தடை செய்து எந்தப் பயனும் இல்லை. எனவே, நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். மாற்றம் நம் அனைவரிடமும் இருந்து தொடங்க வேண்டும்.
vikatan.com

கருத்துகள் இல்லை: