வியாழன், 10 ஜனவரி, 2019

கனிமொழி ராஜ்யசபாவில் கடுமையான வாதம் ,, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு:அறிவித்த மூன்றே நாளில் நிறைவேற்றம் ...

எனக்கு புரியும் மொழியில் பேச முடியுமா?” மாநிலங்களவையில் கர்ஜித்த கனிமொழி
திமுகவும்  , லாலுவின் ஆர் ஜே டி கட்சியும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.. அதிமுக , கம்யுனிஸ்டுகள் . மாயாவதி  . மம்தா  அகிலேஷ் போன்றவர்களின் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகள் ஆதரித்தன அல்லது பாஜகவுக்கு  வசதியாக வெளி நடப்பு செய்தன 

முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எவ்வாறு நிர்ணயித்தீர்கள் என திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி
BBC :முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்
தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவை நிறைவேறிய நிலையில்,மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் நடந்த இந்த வாக்கெடுப்பில் முன்னேறிய வகுப்பினரில் பின் தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 124 வது திருத்த மசோதா அருதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக 7 பேரும் வாக்களித்தனர்.
தமிழக எம்.பி.க்கள் முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்re>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டதும் இது சட்டமாகும்.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இத்தகைய ஒரு திட்டம் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் அது நிராகரிக்கப்பட்டது.
அது போல இந்த அரசமைப்பு திருத்த சட்டமும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுக- அதிமுக தவிர, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட நாட்டின் பிற கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளன.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்போது இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக திங்கள்கிழமை செய்தி வெளியானது. செவ்வாய்க்கிழமையே மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதே நாளில் நிறைவேற்றப்பட்டது.
மறுநாள், புதன்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் மூன்றே நாளில் இந்த சட்டத் திருத்தம் பற்றிய செய்தி வெளியாகி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினத்தந்தி :புதுடெல்லி, மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு  தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது.
நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.
 எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: