ஒரு குதுகலமான பியானோ இசையில் ஆரம்பமாகும்.இந்த பாடல். ஆரம்பமான உடனேயே அந்த குதுகலத்தையும் மீறிக்கொண்டு வெடித்து கிளம்பும் விரக்தி, வெறுமை உணர்வை எப்படி விளங்க வைப்பது?
வெறும் வார்த்தைகளால் வர்ணித்து விடமுடியாத உணர்ச்சி குவியல்..
வெளியே கொட்டி விடமுடியாத ஆற்றாமை இந்த பாடலின் ஒவ்வொரு கணத்திலும் கேட்கிறது !
இந்த பாடலின் ஒவ்வொரு துளியிலும் அட்டகாசம் போடாத ஆனால் அடங்கமாட்டாத ஒரு காட்டாறு போல உணர்ச்சி குவியல்கள் அடித்துக்கொண்டு ஓடுகிறது .
ஓட்டாத உறவு .. அது தந்த வலி .. அந்த வலியை கூட வெளியே காட்ட முடியாத குடும்ப சூழ்நிலை . எப்படி ஓட்டினாலும் வெட்டியே நிற்கும் உறவை வெறுக்கவும் முடியாது துறக்கவும் முடியாது தத்தளிக்கும் மனதின் மௌனம!
பாடல் வரிகளை பல சமயங்களில் முந்தி கொண்டு நிற்கும் இதன் இசையின் தரம் இனி எந்த பாடலுக்கும் எந்த பாடகனுக்கும்..... உச்சத்தை தொட்டுவிட்டது!
இந்த பாடலுக்குள் வாலியும் .விசுவநாதனும், ராமமூர்த்தியும் சவுந்தரராஜனும் பல நாட்கள் குடியிருந்து மூழ்கி எழுந்து அனுபவித்து படைத்துள்ளார்கள் .
இன்றைய சூழ்நிலையில் எம்ஜியாரின் அதிமுக வாரிசுகளுக்கு இப்பாடலின் வரிகள் பொருந்தும் என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை. ஆனால் பொருந்தும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக