Gajalakshmi
Oneindia Tamil
குடகு : தமிழக்ததில் பாதுகாப்பு இல்லாததாலேயே
கர்நாடகா வந்துள்ளதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். குடகு மாவட்டத்தில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியுள்ள விடுதியில் கடந்த 2 நாட்களாக தமிழக போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோ சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதால் தான் கர்நாடகாவில் வந்து தங்கியுள்ளோம். இங்கும் வந்து தமிழக போலீசார் மிரட்டல் விடுக்கின்றனர்.
தமிழக போலீசார் ஒவ்வொரு அறையாக வந்த சோதனை நடத்திய புகைப்படத்துடன் கர்நாடக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளோம். அவர்களும் காவல்துறை டிஜிபியிடம் பேசியுள்ளோம், பாதுகாப்பு தருவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி எங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். இது ஒரு புறமிருக்க 122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசை ஜெயிக்க வைத்தோம். \
சசிகலா கூறியதால் அமைதியாக இருந்து ஆட்சிக்கு கொண்டு வந்தோம். ஆனால் இவர்கள் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து பேசிய கரூர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி, ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை, சசிகலா வழிநடத்தி சென்றார். இந்த ஆட்சியை, கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துக் கொண்டு இப்போது ஆட்சி செய்கின்றனர். இரு அணிகள் இணைப்பின் போதும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்து கேட்கவில்லை. தினகரன் உத்தரவின் பேரில் 21 எம்எல்ஏக்கள் செயல்படுகின்றனர்.
இது நாங்கள் உருவாக்கிய அரசு, நாங்களும் இந்த அரசுக்கு வாக்கு அளித்துள்ளோம். தைரியம் இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று மீண்டும் முதல்வராக வாருங்கள். சசிகலா, தினகரன் யாரை முதல்வராக சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களுக்குத் தான் நாங்கள் வாக்களிப்போம். முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பதைத் தான் எங்களை தொடர்பு கொள்ளும் தொகுதி மக்களும் கூறுகின்றனர்.
முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்குங்கள் அல்லது அரசை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்கள் ஜெயிக்கவைக்கிறோம் என்று தான் மக்கள் எங்களிடம் சொல்கின்றனர். கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி விவகாரத்தில் அவர்கள் சிக்கியிருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள். இன்று காலையில் ரிசார்ட்டில் 4 டிஎஸ்பிகள் எனக்கு அருகில் அமர்ந்து ரூ. 15 கோடி வரை பேரம் பேசினார்கள். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றால் வழக்கு பாயும் என்று எச்சரித்தனர். முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபாலிடம் சொல்லி சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பார் என்று மிரட்டினார்கள் என செந்தில்பாலாஜி கூறினார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக