Essaki
Oneindia Tamil
தென்காசி : நாட்டில் ஆவியும், காவியும் தான் கட்சியையும் ஆட்சியையும் செய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகிலுள்ள ஆயிரப்பேரியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுக் குழுவில் நடந்தது அவர்கள் உள்கட்சி பிரச்னை. அதிமுகவில் மறைந்த ஒரு தலைவரை நிரந்தர பொதுசெயலாலராக எப்படி இருக்க முடியும். யார் வேண்டுமானாலும் பொது செயலாளராக இருக்கட்டும். அது அவர்கள் உள் கட்சி பிரச்சினை.
நாட்டில் ஆவியும்,காவியும் தான் கட்சியையும்,ஆட்சியையும் செய்கிறது. காவிகட்சி ஆட்டி படைக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தி கொண்டனர், இப்போது உள்ளாட்சி தேர்தல் வருகிறது.
அதிலும்,பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணிக்கு தாயாராவது போல தெரிகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
இரண்டு மாநிலங்களை ஒரு ஆளுநர் பார்ப்பது கடினமானது. முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதை நிரூபித்து விட்டு பேசட்டும். பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சியை நடத்தட்டும். பெரும்பான்மையே இல்லை எனில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தட்டும்.
அதிமுக உடைந்து வருவதால் முதல் இடத்தில் திமுகவும், இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. எங்கள் கட்சிக்கு இன்னும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். இன்னும் 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக