அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி இனி
யாருக்கும் கிடையாது என இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
சென்னை:<
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் 12-ந்தேதி நடைபெறும் என்று
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அறிவித்திருந்தது.
இதற்கு டி.டி.வி.தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுக்குழுக்
கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று அந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி கார்த்திகேயன் அந்த வழக்கை
தள்ளுபடி செய்து “பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை இல்லை” என்று
அறிவித்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் அந்த தீர்ப்பை
எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.<
நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல்குத்தூஸ் இருவரும் அந்த வழக்கை
விசாரித்து நேற்றிரவு தீர்ப்பை வெளியிட்டனர். பொதுக்குழு கூட்டத்துக்கு தடை
விதிக்க மறுத்த அவர்கள், அந்த கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள்,
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டனர்.
தடை எதுவும் விதிக்கப்படாததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நேற்றே அவர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு வரவழைத்து தங்க வைத்திருந்தனர்.
தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களை சொகுசு பஸ்கள் மூலம் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் அழைத்து வந்திருந்தனர். சென்னை புறநகர்களில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு அங்கேயே காலை உணவு வழங்கப்பட்டது.
பிறகு அவர்கள் சொகுசு பஸ்கள், வேன்கள், கார்கள் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். காலை 8.30 மணி முதல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள் வந்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சுமார் 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வந்தனர்.
அழைப்பிதழை காண்பித்த பிறகே அவர்கள் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழ் இல்லாத யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
9 மணிக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் வரத் தொடங்கினார்கள். தினகரன், ஆதரவாளரான தளவாய் சுந்தரமும் இன்றைய பொதுக்குழு கூட்டத்துக்கு வந்திருந்தார். 9.20 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார்.
9.30 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு மதுரவாயலில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அவர் கூட்டம் நடந்த ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு வந்த போது செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். திருமண மண்டபத்தில் உள்ள தனி அறைக்கு சென்ற அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கடந்த முறை ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நடந்தபோது மேடையில் மூத்த நிர்வாகிகளில் 45 பேர் அமர இடமளிக்கப்பட்டது.
இந்த தடவை மேடையில் அமர்ந்தவர்கள் எண்ணிக்கை சற்று உயர்த்தப்பட்டது. மூன்று வரிசைகளில் மேடையில் நாற்காலிகள் போடப்பட்டு அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் 57 பேர் அமர வைக்கப்பட்டனர்.
மேடையில், “அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி” பொதுக்குழுக் கூட்டம் என்று எழுதப்பட்டு இருந்தது.
கூட்டத்துக்கு மதுசூதனன் தலைமை தாங்கினார். முதலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பிறகு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழு- செயற்குழு கூட்டம் தொடங்குவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முதலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.
11.10 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. மொத்தம் 12 தீர்மானங்கள் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு அழைப்பிதழில், “தற்போது கழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
1. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
2. ஜெயலலிதா இருந்த போது அவரவர் வகித்த பதவிகளில் நீடிக்க வேண்டும்.
3. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்தி வருவதற்கு பாராட்டு.
4. ஜெயலலிதா நினைவிடம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு.
5. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு. வார்தா புயலில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.
6. தினகரன் அறிவித்த நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது.
7. சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து.
8. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர். இனி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. இதற்காக அ.தி.மு.க.வின் சட்டவிதிகளில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இனி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய மாட்டோம். எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க மாட்டோம்.
9. அ.தி.மு.க.வில் வழி காட்டும் குழு ஏற்படுத்தப்படுகிறது. அந்த குழுவை வழி நடத்த ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ.பன்னீர் செல்வம், இணை தலைவராக எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. கட்சியின் சட்ட விதி 19ல் இதற்காக திருத்தம் செய்யப்படுகிறது.
10. பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இணை தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
11. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் செயல்படுவார்கள்.
12. கட்சியில் யாரையும் நீக்கவும், சேர்க்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றையக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைத்து தீர்மானங்களையும் வரவேற்று ஆதரித்தனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக