திரைப்பட
பைனான்சியர் இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக 'புரியாத புதிர்'
படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான படம் 'புரியாத புதிர்'. ‘மெல்லிசை’ எனப் பெயரிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு முடித்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியானது. விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதி, தன்னை ஷங்கர் என்ற திரைப்பட பைனான்சியர் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகச் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஷங்கர் என்ற திரைப்பட பைனான்சியரிடம் தான் 2014ஆம் ஆண்டு 14 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாகவும், அதற்கான வட்டியைச் சரியாகச் செலுத்தி வந்த நிலையில் 'புரியாத புதிர்' படம் வெளியான அன்று 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்து அவரிடம் வாங்கிய கடன்தொகையை முழுமையாக அடைத்துவிட்ட நிலையில் தற்போது மேலும் 2 கோடி ரூபாய் தர வேண்டும் என்று ஷங்கர் மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.
புரியாத புதிர் படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையில் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படத்தை தீபன் தயாரிக்கவுள்ளார். இரண்டு கோடி ரூபாய் பணம் தராவிட்டால், அந்த படத்தை வெளிவர விடாமல் தடுத்து நிறுத்தப்போவதாகவும், முன்பு கடன் வாங்கியபோது தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும். அதனைத் திருப்பி தர மறுப்பதோடு தன்னை மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக