புதன், 13 செப்டம்பர், 2017

பிரிந்தானியா ..தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்

Britain freezes Dawood Ibrahim's properties worth $6.7 billion: UK lists ...
இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலாள சொத்துக்களை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இதேபோல் தாவூத்தின் கூட்டாளிகள் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி சொத்து முடக்கம் லண்டன்: மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன். உலகில் உள்ள மிகப் பெரிய பணக்கார தாதாக்களில் இவரும் ஒருவர் என்று போர்பஸ் பத்திரிகை 2015-ம் ஆண்டு தெரிவித்து இருந்தது. தாவூ இப்ராகிமுக்கு உலகின் பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலாள சொத்துக்களை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை முடக்குவது குறித்து மத்திய அரசு இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஏற்கனவே பேசிவந்தன. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் தெவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து இங்கிலாந்து அரசு தாவூத்தின் சொத்துக்ளை முடக்கி நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதேபோல் தாவூத்தின் கூட்டாளிகள் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. maalaimalar


கருத்துகள் இல்லை: