வெள்ளி, 1 செப்டம்பர், 2017

டாக்டர் கிருஷ்ணசாமி : ஏழு கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் எழுத முடியாதவர் எப்படி நல்ல மருத்துவர் ஆகமுடியும்?

அனிதாவின் தற்கொலையில் அனுதாபம் கொள்ளலாம், அங்கீகரிக்க முடியாது: கிருஷ்ணசாமி:
;அனிதாவின் தற்கொலையில் அனுதாபம் கொள்ளலாம் ஆனால் அங்கீகரிக்க முடியாது என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ; இது குறித்து இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எழு கேள்விக்கு ஒரு கேள்வி பதில் அளித்தாலே மருத்துவராக தகுதியாகி விடலாம். அந்த ஒரு கேள்விக்குக்கூட பதில் அளிக்காதவர்களை எப்படி மருத்துவராக தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் என் கேள்வி?
இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே தமிழக அரசாங்கம், எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தேவையற்ற அழுத்தத்தை கொடுத்து எங்களுக்கு விதிவிலக்கு தாருங்கள், விதிவிலக்கு தாருங்கள் என்று நீதிமன்றம், சட்டமன்றம் சென்று அழுத்தம் கொடுத்ததின் விளைவாக தமிழக மாணவர்கள் சிலர், அனைவரும் கிடையாது, ஒரு சிலர், ஒருவேளை இப்படியும் வருமோ என்ற அவநம்பிக்கையில் இருந்து விட்டார்கள். ஆனால் நீட் தேர்வின் மூலமாக தான் தேர்வு நடைபெறும் என உச்சநீதிமன்றம் இறுதியாக கூறிவிட்டது. இப்போது நீட் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.


இதில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கிறார். இப்பொழுது அதை ஒப்புக்கொள்ள முடியாது. எந்த விதத்திலும் அது செல்லுபடியாகாது. பணமதிப்பு நீக்கம் முடிந்து போய்விட்டது தற்போது என்னிடம் வந்து ஒரு கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அது முடிந்து போன ஒன்று. காலாவதியான ஒன்றை பற்றி எப்படி பேச முடியும்?

இந்த பெண்ணின் மரணத்தில் அனுதாபம் கொள்ளலாம், ஆனால் அங்கிகரிக்க முடியாது. ஏன் என்று சொன்னால் அந்த பெண்ணுக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த வருடம் எழுதலாம், அதுக்கும் அடுத்த வருடம் எழுதலாம். 700க்கு 87 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே சமயத்தில் 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண் வாங்கியுள்ளார். இந்த அளவுக்கு புத்திசாலியாக உள்ள ஒருவர் ஏன் இன்னும் ஒரு வருடம் கூடுதலாக படித்திருந்தால் 87 என்பது 187 ஆகவோ, 200 ஆகவோ மாறலாம் அல்லவா?

இந்த ஆண்டு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த பெண்மணி எந்த அடிப்படையில் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை இன்னும் நடைபெறவில்லை, காவல்துறை அறிக்கை வெளிவரவில்லை.

அதற்கு முன்னதாகவே சில அரசியல்வாதிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் இரண்டு தான் அரசியல்.. சாவு அல்லது நோவு.. இந்த இரண்டை வைத்துதான்  30, 40 வருடங்களாக அரசியல் செய்கிறார்கள். அதே போல் தற்போது இந்த பெண்மணியை வைத்து நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக, மாநில அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: