வியாழன், 31 ஆகஸ்ட், 2017

எடப்பாடி எம் எல் ஏக்கள் சந்திப்பு .. 40 எம் எல் ஏக்கள் அதிருப்தியில்! செங்கோட்டையன் அடுத்த CM ?

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தலைமை செயலகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். எம்.எல்.ஏக்களை அழைத்து வரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் தங்கியிருக்கிற நிலையில் 21 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதிமுகவை சார்ந்த எம்.பி.க்கள் மற்றும் எல்.எல்.ஏக்களை தலைமை செயலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். அவர்களை மாவட்டம் வாரியாக அழைத்து வரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட அமைச்சர்களிளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கட்சி தொடர்பான கூட்டம் ஒன்றில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்காத ஒரு அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் இந்த கூட்டத்தில் யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது வரை தினகரனுக்கு ஆதரவான 21 எம்.எல்.ஏக்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.


அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக செய்தியாளர்களிடம் பேசி வரும் தினகரன், எடப்பாடி தரப்பில் தங்களது ஸ்லீப்பர் செல்ஸ்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும் தவைப்படும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள் என்கிற ரீதியில் அவர் கூறியிருந்தார். இதனாலேயே யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ்களாக இருக்கிறார்கள் என்கிற நோக்கத்தில் இந்த ஆலேசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போதைய ஆட்சிக்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், மேலும் இங்கிருந்து கொண்டே தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் வகையில் தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய கூட்டத்திற்கு அனைத்து ஆதரவு எம்.எல்.ஏக்களும் வருவார்களா அல்லது வந்த பிறகு தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பார்களா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. தினகரன்

கருத்துகள் இல்லை: