வியாழன், 31 ஆகஸ்ட், 2017

திமுகவின் 98 எம் எல் ஏக்களும் பதவி விலகல் ?

mathi. Oneindia Tamil: சென்னை: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மயை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாத நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 98 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்வார்களோ? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
அதிமுக பிளவுபட்டது முதலே தமிழக நிர்வாகம் முடங்கிவிட்டது. தமிழகத்தின் உரிமை பிரச்சனைகளில் டெல்லியின் விருப்பப்படியே தமிழக அரசு செயல்படுகிறது.
இது தமிழக மக்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் ஆகிய ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே ராஜினாமா செய்து மறுதேர்தலை நடத்துவார்களா? என்பது தமிழக மக்களின் பல மாத எதிர்பார்ப்பு. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதால் பெரும்பான்மையை எடப்பாடி அரசு இழந்துவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஆளுநர் அப்படியெல்லாம் உத்தரவிட முடியாது என கைவிரித்துவிட்டார்.


இந்நிலையில் சேலத்தில் இன்று திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் பந்து என் கையில் இல்லை என் கூறியிருக்கிறார். 89 எம்.எல்.ஏக்களுடன் திமுகவின் பந்து இருக்கிறது. இந்த பந்தை கொண்டு வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சுகள் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடியே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்களோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.<

கருத்துகள் இல்லை: