Shalinmarialawrence: தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி
உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா நமக்கு ? வாருங்கள் ஆராய்வோம் .
வடசென்னைக்காரனெல்லாம் கருப்பன் ,ரவுடி ,கொலைகாரன் ,கூலிப்படை-இப்படிக்கு தமிழ் சினிமா
ஆன்டனி ,டேவிட் என்று கிறிஸ்தவ பெயர் வைத்தவனெல்லாம் கடத்தல்காரன் ,வில்லனுக்கு அடியாள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
நாங்கள் சண்டை போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடுதான் சண்டை போடுவோம் ,இங்கே தென் தமிழ்நாட்டில் சாதி வெறியோடு சுற்றி திரியும் மிருகங்களை பற்றி கவலை பட மாட்டோம்-இப்படிக்கு தமிழ் சினிமா
கேரள பெண்கள் எல்லோருமே வெறும் ரவிக்கை பாவாடையோடு ஆண்களை தேய்த்து கொண்டு வளம் வருவார்கள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
வன்புணர்வு செய்த வில்லனை ஹீரோயின் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் ,அவன் மேல் கேஸ் கொடுக்க கூடாது -இப்படிக்கு தமிழ் சினிமா
இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
படித்த பெண்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள் ,ஹீரோ அவர்களை அடிப்பார் சினிமாவில் குடும்ப வன்முறை நியாயப்படுத்தப்படும் -இப்படிக்கு தமிழ் சினிமா .
"அடிடா அவள ,வெட்றா அவள " "இந்த பொம்பளையே இப்படிதான் தெரிஞ்சு போச்சுடா " -இப்படிக்கு பெண்களை பற்றி Phd படித்த தமிழ் சினிமா .
கவுண்டரையா நீதிமான் ,தேவரையா ஆள பொறந்தவரு ,முனுசாமி தேவரையா செருப்ப கடைசி வரைக்கும் தொடச்சிட்டே இருக்கணும் -இப்படிக்கு DNA ஆராய்ச்சி செய்த தமிழ் சினிமா .
ஹீரோயினோடு காதல் காட்சி வைக்க துப்பில்லாமல் ,மாமியாரின் முதுகை தேய்த்துவிடும் காட்சி வைத்த -உங்கள் தமிழ் சினிமா .
ஒரு பெண்ணை அடக்க வேண்டுமென்றால் அவளுக்கு பொதுவில் ஹீரோ கட்டாய முத்தம் கொடுக்க வேண்டும் இல்லை கட்டாய தாலி கட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்த -உங்கள் தமிழ் சினிமா
திரையில் தமிழ் பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று கிளாஸ் எடுப்போம் .நிஜ வாழ்க்கையில் பப்பில் கும்மாளமடிப்போம் -இப்படிக்கு சினிமாவை வைத்து மனவன்மத்தை தீர்த்து கொள்ளும் தமிழ் சினிமா .
கதாநாயகி கூட வரும் பெண்களை "item " என்று கிண்டலடிப்போம் -இப்படிக்கு genology படித்த தமிழ் சினிமா .
கணவனை இழந்தப்பெண்கள் என்றால் என்னேரமும் செக்ஸை பற்றியே நினைத்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லுவோம் -இப்படிக்கு உளவியல் படித்த தமிழ் சினிமா .
கரண்ட் ஷாக் கொடுத்தாலும் சிரிக்கும் ஹீரோ ,புல்லேட்டை கையில் பிடிக்கும் ஹீரோ -இப்படிக்கு அறிவியல் விதிகளை மாற்றி அமைத்த தமிழ் சினிமா .
ருத்ரையா போன்ற நல்ல இயக்குனர்களை -வாழ்வாதாரம் இல்லாமல் ஓடவிட்டு தமிழ் சினிமா
அரசியலுக்கு வரமாட்டோம் ஆனால் ஹீரோ என்ட்ரி பாடலில் அவ்வளுவும் அரசியல் இருக்கும் -இப்படிக்கு கேவல அரசியல் செய்து மார்க்கெட்டிங் தக்கவைக்கும் தமிழ் சினிமா .
வடசென்னை பெண் வேடத்திற்கும் பாம்பாயில்ருந்து ஹீரோயின்களை தேடி கொண்டு வந்து கொண்டிருக்கும் -சமத்துவ தமிழ் சினிமா .
டேனியல் ராஜாவையும் ,ஜோசப் விஜயையும் பெயர் மாற்றவைத்த தமிழ் சினிமா .
ஹீரோ நரைத்த முடியுடன் இருப்பார் ,ஹீரோயின் 15 வயதுக்குள் இருக்கவேண்டுமென தேடி பிடிக்கும் -matured தமிழ் சினிமா .
டீச்சரகளை ஆபாசமாக சித்தரித்த தமிழ் சினிமா .
நர்ஸுகளை டாக்டரிடம் கிளர்ச்சி அடைந்தவராகவே சித்தரிக்கும் தமிழ் சினிமா .
திருநங்கைகளை ,மாற்று திறனாளிகளை இன்றுவரை கேலிசித்ரவதை செய்யும் தமிழ் சினிமா .
மாற்று திறனாளிகள் கண்டுகளிக்க கூடியவகையில் அவர்களுக்கான வசதியை திரையரங்குகளிடம் டிமாண்ட் செய்யாத தமிழ் சினிமா .
35 வயதிற்குமேல் ஹீரோயின்களை அம்மாக்களாக ,சகோதரிகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தமிழ் சினிமா .
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அனைவரும் முட்டாள்களாய் காட்டும் தமிழ் சினிமா .
பெரும்பாலும் ஹிந்துத்துவ கொள்கைகளின் பிரச்சார பீரங்கியாக இருக்கும் தமிழ் சினிமா .
சாதிய வன்முறைகளுக்கு கொம்பு சீவி விடும் தமிழ் சினிமா .
ஜாதியை பாலூட்டி வளர்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா .
பெண்ணடிமைத்தனத்தை காட்சிகளில் செதுக்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமா .
இத்தகைய தமிழ் சினிமாவை விமர்சிப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிற கேள்வி மூளை முடுக்கெல்லாம் ஒலிக்கிறது . கேட்பது எல்லாம் கரப்பாண்பூச்சுகளும் ,நடிகர்களுக்கு ஜால்ரா போட்டு வாழும் சில சினிமா ஒட்டுன்னிகளும் .
நான் கேட்கிறேன் ...
சமுதாயத்தை பற்றி துளி கூட அறிவு இல்லாமல் ,சமூக நீதி பற்றி எள்ளளலவும் அறியாமல், சாதியை கொண்டாடி கொண்டு ,பெண்களை ஒரு பொருளை போல் நடத்திக்கொண்டு ,அவர்களை அசிங்கமாய் சித்தரித்து கொண்டு ,அறிவியல் எப்படி வேலை செய்யும் என்கிற மூளை இல்லாமல் ,ஹாலிவுட் படங்களை உரிமம் இல்லாமல் திருடிக்கொண்டு ,தமிழ் சமூதாயத்தை பற்றி போலி பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சினிமாவிற்கு என்ன தகுதி இருக்கிறது ????
நான் இங்கே பாலச்சந்தரையோ ,ஸ்ரீதரையோ ,மகேந்திரனையோ ,ராமையோ ,கார்த்திக் சுப்பாராஜையோ இல்லை அவர்களை போல் சிறிதேனும் மூளையை உபயோகப்படுத்தி படம் எடுக்கும் சினிமாக்காரர்களை கேட்கவில்லை .
சினிமாவில் பெருபான்மையினராக இருக்கும் வியாபாரம் மட்டுமே நோக்காய் ,தமிழ் சினிமாவை வளரவிடாமல் இன்னும் பழமை பேசி திரியும் மக்களை கேட்கிறேன் .
உங்களுக்கு என்ன தகுதி இருந்தது மேல் சொன்ன விஷயங்களை செய்வதற்கு ,உங்கள் படங்களில் புகுத்தியதற்கு? லாஜிக் என்றால் என்ன வென்று தெரியாமல் ,அறிவியல் என்றால் என்னவென்று தெரியாமல் ,சமூதாய நிலை என்னவென்று தெரியாமல் படங்களை எடுப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
எந்த ஒரு தகுதியும் இல்லாமல் நீங்கள் படம் எடுக்கும்போது ,வாயை கட்டி வயிற்றை கட்டி 153 ரூபாயில் படம் பார்க்கும் எந்த ஒரு எளியவனுக்கும் அந்த படத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது . அப்படி இல்லையென்றால் அவர்களை நீங்கள் மனிதர்களாக மதிக்கவில்லை ,வெறும் உங்கள் காலில் ஓரத்தில் ஓடி கொண்டிருக்கும் எறும்புகளாக நினைக்கிறீர்கள் என்றே அர்த்தம் .
உங்கள் படங்களை தகுதியானவர்கள் தான் விமர்சிக்க வேண்டும் என்றால் ,தயவு செய்து "adults only " போர்டை போல் ஏதாவது போர்டை மாட்டிவிட்டு படம் காட்டவும் .
இப்படிக்கு சத்யஜித்ரே ,அடூர் கோபாலக்ரிஷ்னன் படங்களை 10 வயதிலிருந்தே பார்த்து பழகிய "QUALIFIED "
ஷாலின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக