புதன், 30 ஆகஸ்ட், 2017

சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன்!

2
1Aasifniyaz": கோவை-அவினாசி சாலையில் சோமனூர் அருகேயுள்ள செகுடந்தாளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த விசைத் தறித் தொழிலாளி முருகேசன்.  அங்கு ஆதிக்கச்சாதி கவுண்டர்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளான 30 அருந்ததியக் குடும்பங்களில் இருந்து வந்த முதல் எதிர்ப்புக்குரல் முருகேசனுடையதே.
1998 நவம்பர், தீபாவளி நேரம்.அவினாசியில் உள்ள மாமனார் வீட்டிலிருந்து செகுடந்தாளிக்கு 6 மாத கர்ப்பிணி மனைவியுடன் அரசுப் பேருந்து ஏறினார்.
காலியாய் இருந்த ஓர் இருக்கையில் அவர் அமர, அருகில் இருந்த சாதி வெறியர், “சக்*** நாயே, நீ எப்பிடி என் பக்கத்தில் அமரலாம்” எனக் கத்தியிருக்கிறார். அதற்கு முருகேசன், “சும்மா இருங்க, நீங்க வாங்கின அதே டிக்கட்த்தைதான் நானும் வாங்கியிருக்கேன்” என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து வாக்குவாதம் முற்றுகிறது. பேருந்தில் இருந்து இறங்க முருகேசன் தொடர்ந்து மறுத்ததால் பஸ்சை நிறுத்தி இறங்கிச் சென்று விடுகிறார் அந்த பெரிய கவுண்டர்
இரவு 8 மணிக்கு ஊர்க் கவுண்டர்கள் சேர்ந்து முருகேசன் வீட்டிற்கு வந்து அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். ரத்தக் காயங்களுடன் திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முருகேசன். அடித்தவர்கள் மீது No Action.  ஆதி தமிழர் பேரவை இதைக் கையில் எடுத்து போராட்டம் அறிவித்தது.
அருந்ததிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அகதிகளாக வெளியேறும் போராட்டம்நடத்தினர். 250 (ஆண்கள்/பெண்கள்) கைது செய்யப்பட்டனர். ஆண்களுக்கு 15 நாள் சிறை. அதற்குப் பின் போராட்டம் எழுச்சி பெற்று கைது கோரிக்கை வலுப் பெற்றது. கவுண்டர்கள் ஒன்று சேர்ந்து முருகேசனை வழக்கை வாபஸ் வாங்க வலியிறுத்தினர். பணத்தாசைகாட்டி பின் மிரட்டல் விடுத்தனர். முருகேசன் அஞ்சவில்லை.
“கேவலம் சக்*** பய கவுண்டர்களை கோர்ட்டுக்கு இழுப்பதா” என கோபம் கொண்டர்வர்கள் 1999 நவ.16 ஆம் நாள் முருகேசனை அடித்தார்கள்..அடித்தார்கள். ஒரு பாறாங்கல்லைத் தூக்கி அடிக்க,முருகேசன் அதே இடத்தில் மரணமடைந்தார்.

திருப்பூர் மருத்துவமனையில் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முருகேசனின்மனைவி கருப்பாத்தா 8 மாதக்கைக் குழந்தையுடன் கைம்பெண்ஆனார்.

முருகேசனின் உடலைக்கொடுக்காமல் காவல்துறையினர் அவர்களாகவே அடக்கம்செய்துவிட்டனர். கொடுமை என்னவென்றால்,முருகேசனின் உடல் ஊர் சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.2 கீமி தள்ளி ஒதுக்குப்புறமாக அடக்கம் செய்யப்பட்டார்.
பின் தொடர்ச்சியான போராடத்தின் காரணமாக மாரப்ப கவுண்டரும், பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனையும் கிடைத்தது.ஆனால், மேல் முறையீட்டில் உயர் நீதி மன்றம் விடுதலை செய்தது. இருவரும் சுகந்திரப் பறவைகளாய் வெளியேறினர்.
குறிப்பு: மேலவளவு முருகேசன் வேறு. அவர் பஞ்சாயத்துத் தலைவர். தலித் என்பதால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்து அவரைக் கொலை செய்தனர்.  thetimestamil

கருத்துகள் இல்லை: