கூலித்
தொழிலாளியின் மகள் அனிதா, பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள்
பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல்போனதால் தனது மறைந்த தாய்
ஆனந்தியின் படத்தின் முன்பு தூக்கிலிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார்.
பெரியார் நகர் காலனியில் வசிக்கும் சண்முகம், திருச்சி மார்கெட்டில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஆனந்திக்கு ஐந்து பிள்ளைகள், ஐந்தாவது பெண்தான் அனிதா. டாக்டராக வேண்டும் என்பது இவரது கனவு.
குடும்பம் ஏழையாக இருந்தாலும், பெரியாரியச் சிந்தனையும், கம்யூனிஸ்ட் சிந்தனையும், கல்வித் தகுதியும் அனிதா குடும்பத்தில் நிறைந்திருக்கின்றன. மனைவியை இழந்த தந்தைக்குப் பிள்ளைகள் முன்வந்து வாசகி என்பவரைத் திருமணம் செய்துவைத்தார்கள்.
பாட்டி பெரியம்மாள் மற்றும் சகோதரர்களுடன் வசித்துவந்த அனிதா, தன்னம்பிக்கை கொண்டவர். படிப்பில் திறமையானவர். கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். “எம்.பி.பி.எஸ். படிக்கப்போகிறேன். இல்லையென்றால் பி.எஸ்.சி அக்ரி படித்து சிவில் சர்விஸ் எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, மக்களுக்கு நலப் பணிகள் செய்யப்போகிறேன்” என்று தன் நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லியிருக்கிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.
நீட்டை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் சென்றார். நீட் தேர்வு மூலம்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் அனிதாவின் எம்.பி.பி.எஸ். கனவு கானல் நீராகிப்போனது. அதிக மதிப்பெண்கள் பெற்றும், உச்ச நீதிமன்றப் படியேறியும் பலனில்லை, ஆட்சியாளர்களிடம் முறையிட்டும் பலனில்லை என்பதால் அனிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பெரும் விரக்தியில் ஆழ்ந்தார்.
செப்டம்பர் 1 அன்று மதியம் 1.00 மணிக்கு வீட்டுக்குள் போன அனிதா வெளியில் வரவில்லை, வாசல் கதவும் மூடியிருக்கவே, பாட்டி பெரியம்மாள் ஆகியோர் கதவைத் தட்டி சத்தம்போட்டு கூப்பிட்டுப் பார்த்தார்கள். என்னதான் செய்கிறாள் என்று ஜன்னல் வழியாகப் பார்த்ததும் அனிதா தூக்கில் தொங்குவதைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்கள். அருகிலிருந்த சமூக நலக்கூடம் விளையாட்டு மைதானத்திலிருந்த இளைஞர்கள் இந்த அலறலைக் கேட்டு ஓடி வந்தார்கள். ஓட்டுகளைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தூக்குக் கயிறை அறுத்து அனிதாவைக் காப்பற்ற முயற்சித்தார்கள். ஆனால் உயிர் பிரிந்து நீண்டநேரமாகியிருந்தது.
வீட்டுக்குள் சென்றவர்களில் ஒருவரான மணிகண்டன், “சத்தம் கேட்டதும் ஓடினோம். ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்தோம். நீட் தேர்வு ரிசல்ட், +2 மார்க் ஷீட் போன்றவற்றைத் தனது தாய் போட்டோ முன்பு வைத்து, தாய் முகத்தைப் பார்த்தபடி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ந்துவிட்டோம், அதன் பிறகுதான் அனிதாவின் சகோதரர்களுக்குத் தகவல் சொல்லி வரவழைத்தோம்” என்றார்.
பிரேதப் பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். அங்கே ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் கொறடா இராஜேந்திரனும் வந்திருக்கிறார்கள். “நீட் தேர்வுக்கு ஆதரவுகரம் நீட்டிய நீங்களா இங்கே வந்துருக்கிங்க என்று மக்கள் அதிகாரம் இயக்கத்தினரும், விசிக கட்சியினரும் அவர்களை விரட்டி அனுப்பினார்கள்” என்றும் மணிகண்டன் தெரிவித்தார்.
அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி மதுரையிலிருந்த திருமாவளவனுக்குத் தெரிந்ததும், சென்னைக்குச் செல்லப் பதிவுசெய்திருந்த விமான டிக்கட்டை ரத்துசெய்துவிட்டு, கார் பயணமாக அரியலூர் மருத்துவமனைக்கு இரவு 11 மணிக்கு வந்தார். இரவு 12.45 மணிக்கு அனிதாவின் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு கிராமத்துக்குக் கொண்டுவந்தார்கள்.
அனிதாவின் உடல் திருமா ஆலோசனைப்படி குழுமூர் சமூகநலக் கூடம் விளையாட்டு மைதானத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. காலை 3 மணி வரையில் திருமா அனிதாவின் உடலருகே இருந்தார்.
திராவிடக் கழகத் தலைவர் கீ.வீரமணி, திரையுலகத்தினர் கவுதமன், களஞ்சியம், ரஞ்சித், கமல்ஹாசன் ஆதரவாளர்கள், பாமக பிரமுகர் சாமித்துரை, கொளத்தூர் மணி, செ.கு.தமிழரசன், திமுக பிரமுகர்கள் ஆகியோர் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள், அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். சாதி மதம் கடந்து பல்வேறு தரப்பினரும் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
பாமக மாவட்டச் செயலாளர், காடுவெட்டி குரு அஞ்சலி செலுத்தவருவதாகத் தகவல் பரவியதால் போலீஸ் கூடுதலாகக் குவிக்கப்பட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைக்குக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். வருகை குறித்த தகவல் இரவு தெரியும் என்கிறார்கள்.
மாணவி அனிதா தற்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் போராட்டத் தீயாகப் பரவிவருகிறது. புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் லோகு ஐயப்பன் தலைமையில் மோடி உருவ பொம்மையை எரித்தும் கால்மிதியால் அடித்தும் கண்டனம் தெரிவித்தார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும், முன்வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக