கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம் என நடிகர் கமல் மாணவி அனிதா தற்கொலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அனிதா தற்கொலை போன்ற துயரம் இனி நிகழக்கூடாது. இதை விட அவலம் வேறு வேண்டுமா? அந்த பெண் எந்த ஊர்? என்ன ஜாதி? எல்லாம் முக்கியமல்ல. அவர் என் மகள், அந்த பெண்ணின் பெயர் அக்க்ஷராவோ, சுருதியாகவோ இருந்தால் தான் நான் கோபப்பட வேண்டுமா? ஜாதி, கட்சி, மாநில எல்லை கடந்து நாம் போராட வேண்டியதிருக்கும். நியாயத்திற்காக போராட வேண்டியதிருக்கும். கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம். இந்தோ வருகிறது நல்ல செய்தி என்று குடுகுடுப்பை குலுக்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.
அந்த பெண்ணும்தான். தோழர் திருமாவளவன் வெகுண்டு எழவேண்டும்.
கட்சியை தாண்டி, கடந்து வந்து சண்டை போட வேண்டும். இது என் பிள்ளைகள் பற்றியது. அவர் பிள்ளைகள் பற்றியது. எங்கள் குடும்பத்தை பற்றியது. நான் ஏன் அவரை சொல்கிறேன் என்றால் ஒரு காரணமாக தான் அவர் நல்ல கோபப்படுவார் அதனால் சொல்கிறேன்.
அவர் மட்டுமல்ல எல்லோரும் வரவேண்டும். அனிதா வாங்கிய மதிப்பெண்னை பார்த்தால் எந்த அளவுக்கு எடுத்துள்ளார். ஒரு நல்ல மருத்துவரை நாம் இழந்துள்ளோம். மத்திய, மாநில அரசு எல்லாம் நாம் வைத்தது தான். அங்கு போய் நல்ல வாதாடவேண்டும். வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டிருந்தால், எப்படி மக்கள் வாழ்வார்கள்? இது போன்ற தற்கொலைகள் இனியும் தொடர்ந்து தான், பாடம் கற்க முடியும் என்றால் வேண்டாமே.. நாங்களே கற்றுக்கொள்கிறோம். இல்லையெனில் கற்றுக்கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக