தினமலர் : மும்பை:'ஆதார்' தகவல்களை அணுகும் தொழில்நுட்பம், அமெரிக்காவின் உளவு
அமைப்பான, சி.ஐ.ஏ.,வுக்கு கிடைத்து உள்ளதாக வெளியான பரபரப்பு தகவலை, அரசு
அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.
நாடு
முழுவதும், 115 கோடி பேரின் தனித் தகவல்கள், ஆதார் ஆணையத்தால் சேகரிக்கப்
பட்டு, அடையாள அட்டைகள் வழங்கபட்டுள் ளன. ஆதார் அட்டைகளை வழங்கி வரும்,
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடை யாள அட்டை ஆணையத்துக்கு,
'பயோமெட்ரிக்' எனப் படும், தகவல் சேகரிப்பு தொழில் நுட்பத்தை, சி.எம்.டி.,
எனப்படும், 'கிராஸ் மேட்ச்டெக்னாலஜிஸ்' நிறுவனம் வழங்கி வருகிறது.
அமெரிக்காவை
சேர்ந்த இந்த நிறுவனம், அமெரிக் காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுக்கும்,
தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டு மக்களின்
ஆதார் தகவல் களை அணுகும் தொழில் நுட்பம், சி.ஐ.ஏ.,வுக்கு கிடைத்து உள்ளதாக,
பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு தொழில் நுட்பம் வழங்கி வரும், சி.எம்.டி., நிறுவனம், சி.ஐ.ஏ.,வுடன் தொடர்பில் இருப்பது, ஆதார் தகவல்களின் பாதுகாப்பை கேள் விக்குறியாக்கி உள்ளது.தனி நபர் சுதந்திரம், அடிப் படை உரிமையே, என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில், பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ள நிலையில், வெளியாகி உள்ள இந்த குற்றச்சாட்டு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்தகுற்றச்சாட்டை, அரசு அதிகாரிகள் உறுதியாக மறுத்துள்ளனர்.
ஆதார் தகவல்களை, உலகின் எந்த ஏஜன்சியும் திருடு வதற்கான வாய்ப்பு இல்லை' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக