Aarumugam Bhel 2 % GDP இழப்பு என்பது 56 லட்சம் கோடிகள். இது இந்திய பட்ஜெட் போல கிட்டத்தட்ட 3 மடங்கு. தமிழ்நாடு பட்ஜெட் போல கிட்டத் தட்ட 30 மடங்கு தொகை.
#செல்லாக்காசு அறிவித்த உடனேயே மன்மோகன் சொன்னார், ப.சிதம்பரமும் சொன்னார். எவரையும் ஏன் ரிசர்வ் வங்கி கவர்னருக்குக்கூட தெறிவிக்காமல் ,அறிவித்து நாட்டை அதல பாதாளத்துக்கு எடுத்துச்சென்று விட்டார் நம்ம மோடி.
2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி முடிவ டையும் தருணத்தில் இந்தியா நல்ல பொருளாதார நிலையை எட்டியிருந்தது, அந்நியச் செலவாணி கையிருப்பு. வங்கிகளில் பணக் கையிருப்பு, ஏற்றுமதி வளர்ச்சி என பலவகைகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி செழித்திருந்தது.
அடுத்து வரும் அரசு இதைச் சரியாக பயன்படுத்தினால் 2017 ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்துவிடலாம் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடியினால் இந்திய பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைக்க இயலவில்லை அல்லது விருப்பமில்லை என்பது போல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து ஏற்றுமதியில் தேக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல வளர்ச் சிக்குத் தேவையான பணிகள் அனைத்தும் தோய்வுற்றன.
2016 ஆம் ஆண்டு விலைவாசி உயர்வு, உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கும் போது இதிலிருந்து மக்களை திசைதிருப்ப பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கையிலெடுத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதில் ‘வெற்றி’ கண்டார். ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. தற்போது இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை அடைந் திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒப்பிடுகையில், அப்போது 7.1 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போதைய மூன்று மாதங்களில் 6.1 விழுக்காடாக குறைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால், எந்த பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாதது மட்டுமல்ல; வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளது என இப்பொழுது வெளி வந்துள்ள மத்திய அரசின் அறிவிப்பு தெளிவுபடுத்தி உள்ளது.
‘தி டெக்கான் கிரானிக்கல்’ (21.5.2017) ஏடு வெளியிட்டுள்ள தகவல் மோடி அரசின் பொருளாதார பின்னடைவைத் தக்க முறையில் தோலுரித்துக் காட்டியுள்ளது.
எளிதாக வியாபாரம் செய்ய இயன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 ஆம் இடத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வியாபாரத்தைத் தொடங்க இயன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 155 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்டுமான உரிமங்களை பெறுவதில் 185 ஆம் இடத்தில், ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்துவதில் 166 ஆம் இடத்திலும் இருக்கிறது இந்தியா என்பது மெச்சத்தகுந்ததுதானா?
இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப் போம் என்று 56 அங்குல மார்புப் புடைக்கப் பிளந்து தள்ளினாரே நரேந்திர மோடி - நடந்தது என்ன? 2.13 லட்சம் பேர்களுக்கே வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பரிவர்த் தனை நடக்கும் கால்நடைச் சந்தையில் கைவைத்ததால், 2 கோடி பேர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் அவலம்!
ஒட்டுமொத்த முதலீட்டு உருவாக்கத்தில் 75 சதவிகிதம் அளவுள்ள தனியார் துறை முதலீட்டு உருவாக்கம் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2 விழுக்காடு அளவுதான் (2017 இல்) வளர்ச்சி நிலை அடைந்துள்ளது.
மூன்றாண்டு ஆட்சி முடிவுற்ற நிலையில், மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார பின்னடைவை மறைத் திட, மாட்டிறைச்சி சம்மந்தமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு, நாடு முழுவதும், மாடு தொடர்பாக ஓர் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில், சாகரான்பூரில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடைபெற்ற தாக்குதலைப் பற்றி கவலைப் படாமல், அம்மாநில முதல்வர் யோகி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திற்குச் சென்று ராமனை வழிபடுகிறார். அதைப்பற்றி பேசுகிறார்.
ராஜஸ்தான் நீதிமன்றம், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது; பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை என அறிவிக்கச் சொல் கிறது. இதை தனது ஆத்மா சொல்வதாக நீதிபதி சொல்கிறார்.
இந்துத்துவா தாக்கம் நீதிபதிகளையும் தொற்றிக் கொண்டு விட்டது.
ஆக, வளர்ச்சி என்ற முழக்கம், ஆட்சிக்கு வருவதற்கு மட்டும்தான்; வந்த பின்னோ எந்த வளர்ச்சியும் இல்லை என்பது மட்டுமல்ல; இருக்கிற வேலைவாய்ப்பும் பறி போகிற நிலைமையில்தான் மோடியின் ஆட்சி நடைபெறுகிறது.
அடுத்த இரண்டாண்டில் மக்களின் எதிர்ப்புப் புயல் இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பத்தான் போகிறது!
Aarumugam Bhel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக