செவ்வாய், 6 ஜூன், 2017

கமலஹாசன் : ஜி எஸ் டி வரிவிதிப்பால் பிராந்திய மொழி படங்கள் அழிந்துவிடும் ... அவர்கள் நோக்கமே அதுதானே?


ஜிஎஸ்டி வரியிலிருந்து பிராந்திய மொழித் திரைப்படங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அருண் ஜேட்லிக்குக் கோரிக்கை வைத்தார். சில தினங்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி-யில் சினிமாக்களுக்கு 28% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து கமல் பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஊடகங்கள் மூலம் ஜிஎஸ்டிக்கு எதிராக அழுத்தம் கொடுத்தாலும் பயனில்லை, முன்பை விட வரி குறைவே” என்று பதில் அளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன் ட்விட்டரில் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தபோது, “இது அழுத்தம் அல்ல, துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜி.எஸ்.டி. வரியால் பிராந்திய மொழிப்படங்கள் அழிந்து விடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது. பிராந்திய மொழிப்படங்களைக் காப்பாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார் கமல்ஹாசன்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: