G Thirumurugan Gandhi, D Arun Kumar, M Tyson, and Ilamaran were arrested on 21 May 2017 for attempting to stage a peaceful memorial for Tamils killed in the final stages of the civil war in Sri Lanka. Currently detained under a Tamil Nadu administrative detention law, they are at risk of being held without charge or trial for 12 months.
ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் முதலாவதாக காஷ்மீரில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக 3 உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். ஐ.நா.சபையில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை எழுப்பும் என தெரிகிறது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மெரினா கடற்கரையில் வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவார்கள். அதே போன்று இந்த ஆண்டும் திருமுருகன் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். இதற்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் மற்றும் பலர் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில், இன்று ஐநா சபையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திருமுருகன் காந்தியை பற்றி பேசியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக