புதன், 7 ஜூன், 2017

மியான்மார் விமானம் 116 பயணிகளோடு விபத்து கடலில் மிதக்கும் பாகங்கள் .. Debris found in hunt for missing Myanmar plane


மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்து மாயமானதால் அதனை தேடும் பணியைத் தொடங்கி உள்ளனர். மியான்மரில் ராணுவ விமானம் மாயம்: 116 பேரின் கதி என்ன? யாங்கோன்: மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணுவ தலைமை தளபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
யான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்து மாயமானதால் அதனை தேடும் பணியைத் தொடங்கி உள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை: