சென்னை
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை தேசிய
காங்கிரஸ் துணைத்தலைவர்
ராகுல்காந்தி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்
மேலும் இந்த சந்திப்பின் போது ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கலைஞரை சந்தித்தார்.
நேற்று
நடைபெற்ற கலைஞரின் சட்டமன்ற வைரவிழாவில் பங்கேற்ற பிகார் மாநில முதல்வர்
நிதிஷ்குமார் கலைஞரை நேற்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அதேபோல்
இன்று ராகுல்காந்தி கலைஞரை சந்தித்துள்ளார்.இந்த சந்தி்ப்பிற்கு பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,திமுக
தலைவர் கலைஞரை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் முன்பை விட தற்பொழுது
உடல்நலம் தேறிவருகிறது என்றார்.
மேலும் சோனியாகாந்தி உடல்நிலை குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர் 100% நூறுசதவீதம் உடல்நலத்துடன் அரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோன்று காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போதைய பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தவறான முறையில் காஷ்மீரை வழிநடத்தி வருவதாகவும், இது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் காஷ்மீருக்கு சென்று இருக்கக்கூடிய நிலவரத்தை நேரில் பார்த்தாக வேண்டும் என கூறியுள்ளார்.
படங்கள் - ஸ்டாலின். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக