வியாழன், 8 ஜூன், 2017

ராகுல் கைது ! தடையை மீறி விவசாயிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார் ... மத்தியபிரதேசம்

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ராகுல் காந்தி | படம் உதவி: இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ராகுல் காந்தி |: இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தடையை மீறி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் மான்ட்சர் மாவட்டத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் - மத்தியப் பிரதேச எல்லையில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மான்ட்சர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து ராஜஸ்தான் வழியாக இன்று (வியாழக்கிழமை) மத்தியப் பிரதேசம் புறப்பட்டார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேச எல்லையில் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தியுடன் பிற காங்கிரஸ் தலைவர்களான கமல் நாத், சச்சின் பைலட், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச போலீஸாருடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி, "மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறது. நாடெங்கிலும் விவசாயிகள் போரட்டம் நடத்தி வருகின்றன. பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. இது விவசாயிகளுக்கு எதிரான அரசு" என்றார்.tamilthehindu

கருத்துகள் இல்லை: