செவ்வாய், 6 ஜூன், 2017

தினகரன் 29 எம் எல் ஏக்கள் சந்திப்பு ... எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது.

ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டிஅமைச்சர் ஜெயகுமார் உடனடியைக் பதவி விலக வேண்டும் என்று தினர்கரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் . தங்கத்தமிழ் செல்வனுக்கு எல்லாம் பதில் கூறவேண்டியதில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.  மொத்தத்தில் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர்  குழிபறிப்பது தொடர்கிறது.   தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். சென்னை: அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். இதனால், அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ; ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதில்லை என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கிடையே தினகரனை சந்தித்த தங்க தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. கூறும்போது, “தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபற்றி விரைவில் செய்தி வரும். ஓபிஎஸ் போன்று கட்சியையும் ஆட்சியையும் கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம்.


துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் நாங்கள் தினகரனை சந்தித்தோம். அ.தி.மு.க. ஒரே அணியாகத்தான் உள்ளது. பிளவு ஏதுமில்லை. கட்சி தொடர்பான நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மட்டுமே எடுக்க முடியும்” என்றார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: