திங்கள், 5 ஜூன், 2017

புதுச்சேரி மாநிலம் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறது !

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கிரண்பேடிக்கு புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘புதுச்சேரி ஆளுனர் பதவியில் இருந்து கிரண்பேடியை அகற்றாவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரி புறக்கணிக்க வேண்டும்’ என்றும் சட்டமன்றத்தில் குரல்கள் எழுந்துள்ளன இன்று ஜூன் 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் சிவா, ’’ தொடர்ந்து அரசை ஆளுநர் விமர்சிப்பதை கண்டிக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அரசுக் கொறடா அனந்தராமன் பேசுகையில், ’’ஆளுநருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை கட்டவிழ்ப்போம். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசை போல் ஆளுநர் சித்தரிக்கிறார்’’ என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கந்தசாமி, ‘’புதுச்சேரியின் பாஜக தலைவராக கிரண்பேடியை மாற்றி விடலாம். பல திட்டங்களை தடுக்கிறார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வில்லை. ஓராண்டாக ஆளுநரால் அரசால் செயல்பட முடியவில்லை. 30 உறுப்பினர்களும் டெல்லி சென்று மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அவரது செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்’’ என்றார். பார்பன ஆளுநருக்கு தாழ்த்தபட்ட சாதியை சேர்ந்த  முதலமைச்சரை காண பிடிக்கலையோ? உனக்கு அதுதான் பிடிக்கல்லைன்னா முதலமைச்சர் ஆவேண்டி!


இதற்குப் பிறகு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,
’தனிப்பட்ட அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளார். ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டார். புதுச்சேரி சிறப்பு கூறு நிதியில்,ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி திட்டத்தை தடுத்தார். புதுச்சேரிகாவல்துறை அதிகாரிகளை வீட்டு வேலைக்காரர் போல் நடத்துகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் இருக்கிறதே தவிர... ஆளுனருக்கு அல்ல. கிரண்பேடி ஆளுனர் பதவிக்கு தகுதியில்லாதவர்’’ என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
மேலும்... எந்த அதிகாரிகளும் ஆளுநரை அமைச்சரின் அனுமதி பெறாமல் பார்க்க கூடாது. தொகுதிக்குள் அவரை எம்.எல்.ஏ.க்கள் விடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார் நாராயணசாமி.
இந்நிலையில், ‘’ஆளுனரை மாற்ற வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலை புதுச்சேரி புறக்கணிப்போம் என்று தீர்மானம் கொண்டுவருவோம்’’ என்று அதிமுக அன்பழகன் பேசியிருப்பது அனைத்துக் கட்சிகள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: