படம்: ஜி.கிருஷ்ணசுவாமி .சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கல் குவாரிகளில்
இருந்து எடுக்கப்பட்ட மழைநீர், சுத்திகரிக் கப்பட்டு இன்று முதல் 3 கோடி
லிட்டர் குடிநீர் விநியோகம் தொடங் கப்படுகிறது.
இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குறைவான பருவமழை பொழிவு காரணமாக, சென்னை மாநகருக் கான நீர்
வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டன. இந்நிலையில் மாநகரின் குடிநீர் தேவையை
சமாளிக்க, புறநகர் பகுதியில் இருக்கும் கல் குவாரிகளில் தேங் கியுள்ள
மழைநீரைப் பயன்படுத்த ஆய்வு மேற்கொண்டது.
இதில் முதல்கட்டமாக காஞ்சி புரம் மாவட்டம் மாங்காடு அருகே,
சிக்கராயபுரத்தில் உள்ள 22 கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரைப்
பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டது.
பல அடி ஆழத்தில் உள்ள குவாரிகளில்இருந்து தண் ணீர் எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய் யப்பட்டன. தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப் பியல் துறை உள்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
பல அடி ஆழத்தில் உள்ள குவாரிகளில்இருந்து தண் ணீர் எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய் யப்பட்டன. தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப் பியல் துறை உள்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், கல் குவாரி யில் உள்ள நீர், குடிக்க உகந்தது
என்றும், அந்த நீரை செம்பரம்பாக் கம் ஏரிக்கரை அருகில் உள்ள சுத்திகரிப்பு
நிலையத்தில் சுத்தி கரித்து விநியோகம் செய்வதற்கான சாத்தியம் உள்ளது
என்றும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ரூ.13 கோடியே 63 லட்சம்
மதிப்பீட்டில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, பணி களும் முடிக்கப்பட்டுள்ளது.
இதற் காக 4 கிமீ நீளத்துக்கு குழாய் கள் அமைக்கும் பணிகள், நீரேற்று
தலுக்கான பம்பு செட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணி கள்
அனைத்தும் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தினமும் 3 கோடி லிட்டர் வீதம், சுமார் 300 கோடி
லிட்டர் நீரை, 100 நாட்களுக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், கடந்த
2-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரின் தரம் திருப்திகரமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத்
தொடர்ந்து, சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில்,
குவாரியில் உள்ள நீர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 கோடி லிட்டர் வீதம்
செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு,
சுத்திகரிக்கப்பட்டு பின் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை குறைவான நேரத்தில் வடிவமைத்து, நிறை
வேற்றிய தலைமைப் பொறியாளர் ஜி.சத்தியமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர்
ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி, உதவி செயற் பொறியாளர் மு.ரா.ஜெய்சங்கர், உதவிப்
பொறியாளர்கள் எம்.லெனின், எம்.சதீஷ் ஆகியோருக்கு மேலாண் இயக்குநர் வி.அருண்
ராய் பாராட்டு தெரிவித்தார். tamilthehindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக