வெள்ளி, 9 ஜூன், 2017

ராம் மோகன ராவ் சேகர் ரெட்டியிடம் இருந்து மாதம் ஒரு கோடி மாமூல் பெறுகிறார் ...

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டிக்கும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்ற விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து, மாதந்தோறும், ஒரு கோடி ரூபாயை ராவ் பெற்று வந்தது வருமான வரித்துறை விசார ணையில் தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் 2016 டிசம்பரில், வருமான வரித்துறையினர்< சோதனை நடத்தினர். அவரது வீடு மற்றும் இதர இடங்களில் இருந்து 131 கோடி ரூபாய் பணம் 177 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் சிக்கிய ‘டைரி’யில் அமைச்சர் கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அப்போது தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவின் வீட்டிலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடந்தது.

பின் அடையாறில் வசிக்கும் ராவின் மகன் விவேக் பாபிசெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:
சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய டைரி தகவல்படி, ராமமோகன ராவுக்கு அவர் ஒவ்வொரு மாத மும் ஒரு கோடி ரூபாய்கொடுத்து வந்துள்ளார். 17 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்த தாக ஒப்புக்கொண்டுள்ள ராவின் மகன் விவேக் பாபிசெட்டி, சேகர் ரெட்டியிடம் 10 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
சேகர் ரெட்டியின் டைரியில் மேலும் சில அமைச்சர்கள், அதிகாரிகள், அவரிடம் பணம்
பெற்றிருப்பதற்கான தகவல்கள் இருந்தன. அது பற்றிய தகவல்களுடன், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தோம்.
ஆனால், தற்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனராக உள்ள ராவ் மீது மட்டும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கையை துவங்கி யுள்ளது. அமைச்சர்க ள் மீது நடவடிக்கை எடுக்காதது, சந்தேகம் தருவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது சிறப்பு நிருபர் –
dinamalar

கருத்துகள் இல்லை: