கார் விற்பனையை நிறுத்தும் ஜெனரல் மோட்டார்ஸ்!
இந்தாண்டு
இறுதியுடன் இந்தியாவில் தனது கார் விற்பனையை நிறுத்துவதாக ஜெனரல்
மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில்
தயாரிக்கும் கார்களை இங்கிருந்து ஏற்றுமதி மட்டும் செய்யவிருப்பதாக
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் குர்கான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. துவக்கம் முதலே இந்நிறுவனக் கார்களுக்கு மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோடா போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியாகத் திகழ்ந்து வருகின்றன. போட்டியைச் சமாளிக்க முடியாததால் கடந்த மாதம் ஹாலோல் தொழிற்சாலையில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. புனே நகருக்கு அருகிலுள்ள தாலேகான் தொழிற்சாலையில் மட்டுமே கார் உற்பத்தி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத் தலைவர் காஹர் காசம் கூறுகையில், “'இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால், இந்தாண்டு இறுதியுடன் கார் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். கார் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டாலும், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்” என்று கூறியுள்ளார். மின்னப்மலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக