நான் வந்தேறி.
வந்தேறி .எனக்கு கொடுக்கப்பட்ட பட்டம் .எனக்கு
மட்டுமல்ல
இன்னும் யார் மீள் அரசியல் ரீதியான கருத்துக்களை கூற வேண்டாமென்றும் தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் ,தமிழை பற்றியும் பேச கூடாதென்றும் ஒவ்வொருமுறையும் எச்சரிக்க படுகிறோம் .
என் இனிய தமிழரே இந்திய கிறிஸ்தவர்கள் ஒன்றும் வாஸ்கோடகமாவின் துணிப்பை வழியோ இல்லை மவுண்ட் பேட்டனின் ட்ரங்க் பெட்டி வழியாகவோ இந்தியாவில் நுழைந்தவர்கள் அல்ல .இதே மண்ணில் ஆயிரம் வருடங்கள் ஒடுக்கப்பட்டு ,தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டு மாளாத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மானத்தோடு வாழ மதம் மாறிய உன் தமிழ் மக்களேதான் .
வடக்கேயிருந்து இங்கு 'வந்து ஏறிய' ஜாதியின் கோரப்பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் . ஒருபடி அரிசிக்காகவும் ,ரொட்டிக்காகவும் மதம் மாறியவர்கள் என்று நகைக்கும் நேரத்தில் நினைத்துப்பார் அந்த ரொட்டி துண்டைக்கூட அவர்களுக்கு கிடைக்க செய்யாமல் பார்த்துக்கொண்டது அவர்களின் தாய் மதம் .
அன்று மதம் மாறாமல் இருந்திருந்தால் அன்று என் தாத்தா தலைமை ஆசிரியராகவும் ,பாட்டி ஆசிரியையாகவும் ஆகி இருக்க முடியாது .
ஒடுக்கப்பட்டவர்கள் மார்பை மூட கூட உரிமை இல்லாத இந்த நாட்டில் 1814 ஆண்டு ஒரு சிறப்பு ஆணை மூலம் கிறிஸ்தவ பெண்களுக்கு இந்த உரிமை கிடைத்தது .இதற்காகவே மதம் மாறியவர்கள் ஏராளம் .
நீ தீண்டத்தகாதவன் ,உனக்கு அடிப்படை தேவைககள் கூட கிடையாது ,நீ இழிவாக கருகப்படும் வேலைகளை மட்டுமே செய்வாய் என்று கூறிய மதத்திலிருந்து ,தன்னை ஒரு மனிதனாய் ஏற்று ,அனைவரும் சமம் என்று கூறி ,உணவு ,கல்வி வழங்கிய மதத்தை சாமர்த்தியதோடு ஏற்றுக்கொண்ட சுயமரியாதை வந்தேறிகள் நாங்கள் . Survival instincts என்ற ஒரு விஷயத்திற்கு நாங்களே சிறந்த உதாரணம் .ஆதிக்கம் செய்தவர் வெட்ட வெட்ட தழைத்த வந்தேறிகள் .
நான் உங்களை கேட்கிறேன் ....மதம் மாறியவர்கள் தமிழை பற்றி பேச கூடாது என்று சொன்னால் ,தமிழ் இந்துக்களின் மொழியா ????
அதேபோல் இன்னொரு விஷயம் .இந்து மதத்தை பற்றியும் அதில் வேரூன்றி இருக்கும் இழிவுகள் பற்றியும் பதிவு செய்யும்பொழுது மற்ற மதத்தவர் அதை பற்றி பேச கூடாது என்று வரும் எச்சரிக்கைகள் .
உங்கள் கனிவான கவனத்திற்கு ....
மதம் மாறுவதற்கு முன்பு ஒரு மூன்று தலைமுறை முன்பு வரை நாங்களும் இந்துக்களாக வஙழ்தவர்கள் தான் .அந்த மதத்தின் வழி வந்த ஜாதி ,மனுதர்மம் என்கின்ற இழுவுகளை அதிகம் அனுபவித்தவர்கள் .அப்படி இருக்க இந்து மதத்தை விமர்சிக்க /எதிர்க்க எங்களுக்கே முன்னுரிமை உள்ளது . பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தங்களுக்கு எதிராய் குற்றம் இழைத்தவர்களை பற்றி பேச எல்லா உரிமையும் இருக்கிறது .
ஆண்டாண்டு காலமாக எங்களை அடிமைப்படுத்திய ,இன்றும் சமூக இழிவுகளுக்கு காரணமாய் இருக்கும் மதத்தை நாங்கள் ஏன் விமர்சிக்க கூடாது ? The oppressed have the right to overthrow the oppressor .
அப்படி செய்யும்பொழுது இன்னொரு தரப்பினர் வந்து ஏன் மற்ற மத்ததை விமர்சிக்க கூடாது என்று கேட்பது அவர்களுக்கே இழிவாக இல்லையா ?
ஒருவன் கொலை செய்துவிட்டான் என்று கூறும்பொழுது இன்னொருவன் திருடிவிட்டான் அவனை முதலில் விசாரி என்று திசை திருப்புவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இது . உன்மேல் உள்ள பழியை சரி செய்யாமல் மற்றவரை கை காட்டுவது எத்தகைய்ய நியாயம் ?
கிறிஸ்தவத்தில் வேரூன்றி இருக்கும் பெண்ணடிமைத்தனம் ,மதம் மாறியபின்பும் மக்களுக்குள் இருக்கும் ஜாதியத்தை பற்றி கேள்வி எழுப்பாத இந்திய திருச்சபை,பாலியல் குற்றங்களுக்கு எதிராய் தண்டனையளிக்க தயங்கும் வாடிகானை நான் எதிர்த்து கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் அதற்க்கு முன்னே எங்களின் வாழ்வாதாரத்தையே முடக்கி போட்ட இந்து மதத்தை பற்றி பேசுவது முதல் அவசியம்.
இப்பொழுதான் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதே இவர்கள் இன்னும் ஏன் இந்த பாவாடை கோஷ்டியாக நீடிக்கிறார்கள் என்று கேட்பீர்களானால் ... தலையிலிருந்து வந்தான் ஒருவன் காலிலிருந்து வந்தான் என்ற இழிவான பொய்யை விட எல்லோரும் களிமண்ணிலிருந்து வந்தவர்கள் என்கிற பொய்யில் அவமானம் இல்லை என்பதினால் இன்னும் பல வந்தேறிகள் அந்தந்த மதங்களை இன்னும் பற்றிக்கொண்டிருக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ளவும்.என்னுடைய ஆசையெல்லாம் டார்வினை படித்து மனிதர்கள் சிம்பன்சியிலிருந்து வந்தவர்கள் தான் என்கிற அழகான உண்மையை உணர்ந்து இவர்கள் என்னைப்போல் ultimate வந்தேறி ஆகவேண்டும் என்பதுதான் .
இனி யாரவது வந்தேறி என்பது நீ படித்து வாங்கிய பட்டமா என்று கேட்டால் ஆமாம் ஒரு மதம் கொடுத்த கல்வியை கொண்டு பகுத்தறிவை படித்து வாங்கிய பட்டம் என்று மார்தட்டிக்கொள்வேன் . .
Shalin Maria Lawrencev::

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக