தமிழ்,
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது
ஆகிறது. இவர் 2002–ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக
அறிமுகமானார். ‘அருந்ததி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. வேட்டைக்காரன்,
வானம், தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லிங்கா
படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தி வரும் பாகுபலி–2 படத்திலும் பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார். தொடர்ந்து பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அனுஷ்காவுக்கு வயதாகி விட்டதால், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், பாகுபலி படம் வெளியானதும் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. சில நடிகர்களுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்களும் வந்தன. தெலுங்கு பட உலகில் அறிமுகப்படுத்தி தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த நாகார்ஜுனாவை அவர் விரும்புவதாக கூறப்பட்டது. ஆர்யாவுடனும் சேர்த்து பேசப்பட்டார். அவர்களை காதலிக்கவில்லை என்று பின்னர் மறுப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தெலுங்கு பட உலகில் புதிதாக தகவல் பரவி உள்ளது. பிரபாசுக்கு 37 வயது ஆகிறது. அவருக்கும் வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அடல்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா.
ராணா என்னை எப்பொழுதுமே சிஸ்டர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்று அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார். ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் அனுஷ்கவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் என்ற தகவல் வெளியாகியிருந்த சூழலில் தற்போது இப்படி சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு திருப்புமுனையாக ராணா தனது டிவிட்டர் பக்கத்தில் பாகுபலிக்கு பெண் வேண்டும் என்று ஒரு விளம்பரத்தை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள மணப்பெண்ணின் தகுதிகளைப் பார்த்தால் தமன்னா போன்ற பெண்ணை ராணா தேடுவதாக தெரிகிறது. தமன்னா போன்ற பெண்ணைத் தேடுகிறாரா அல்லது தமன்னாவை குறிப்பிட்டு சொல்கிறாரா என்று தெரியவில்லை. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக