கொடும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பாக ஐக்கிய
நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்கி வரும் 2 அதிகாரிகள் நேற்று சோமாலியா
நாட்டில் உள்ள புண்ட்லேண்ட் பகுதிக்கு சென்றனர்.
கல்கயோ விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கியபோது, அங்கு பாதுகாப்பு
பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால்
சுட்டான்.
இதில் ஐ.நா. சபையின் ஆலோசகர்களான பிரிட்டனை சேர்ந்த ஒருவரும், பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த இன்னொருவரும் பலியானதாக புண்ட்லேண்ட் பிரதமர் அப்டிவெலி
மொஹ்மத் அலி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வீரர் ஒருவரும், அவரது சகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர் maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக