நடிகர்
வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை
இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி
வருகிறார்கள். படத்தை திரையிட அனுமதிக் கக்கூடாது என்று அவர்கள் கூறி
வருகிறார்கள்.
தங்களுக்கு
திரையிட்டுக்காட்டி, தங்கள் அனுமதி வழங்கிய பிறகே படத்தை திரையிட வேண்டும்
என்றும், அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடுத் துள்ளனர்.
முன்னதாக,
வடிவேலு வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும், வடிவேலு மீது தாக்குதல்
நடத்தப்படும் என்று சில அமைப்புகள் மிரட்டியதால், இந்த பிரச்சினையில்,
வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான், அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்து தெலுங்கு அமைப்பை
சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.
இது குறித்து வடிவேலு, ’’படத்தை பார்க்காமலே கருத்து தெரிவிப்பதில், எந்த நியாயமும் இல்லை. ‘தெனாலிராமன்’ படத்தில், கிருஷ்ணதேவராயர் என்று ஒரு வார்த்தை கூட இல்லை. தெனாலிராமனுக்கும், அரசருக்கும் உள்ள நட்பை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். படத்தில், சுந்தர தெலுங்கு மொழியை உயர்த்திப்பேசி நடித்து இருக்கிறேன்.

எனக்கு
மொழி வேறுபாடு கிடையாது. மொழி தெரியாதவர்கள் கூட என் ‘காமெடி’யை
ரசிப்பார்கள். அதை சிலர் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். ‘காமெடி’யாக
நடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ‘காமெடி’யை
இழிவாக நினைக்காதீர்கள்.
தமிழ்நாட்டில்,
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள்
மொழி சண்டையை இழுத்து விட்டு, சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க
முயற்சிக்காதீர்கள். அரசு கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது.
யாரோ
தூண்டி விடுகிறார்கள் என்பதற்காக, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மனதையும்
புண்படுத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று
கூறியுள்ளார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக