திருச்சி
பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.அன்பழகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து நடிகை குஷ்பு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பிரச்சாரம்
மேற்கொண்டார். நத்ர்தா பள்ளிவாசல் பகுதிக்கு வந்த அவர், அங்கு கூடியிருந்த
மக்களை பார்த்து அலேக்கும் சலாம் என்றார்.
பின்னர்
அவர் பேசுகையில், திமுக தொண்டராக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜெயலலிதா
ஹெலிகாப்டர் மூலமாக வானத்தில் பறந்து, பறந்து பிரச்சாரம் செய்கிறார்.
வானத்தில் பறக்கிறவர்களுக்கு மக்களின் அடிப்படை பிரச்சனை என்னவென்று
தெரியாது. ஒரு தடவை ஹெலிபேடு அமைப்பதற்கு 5 கோடி ரூபாய் செலவாகிறது.
இதுபோல் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு அவர் செல்லும் இடங்களில்
அமைத்துள்ளார்கள். ஹெலிபேடு அமைத்த இடங்களை வேறு எந்த பயன்பாட்டுக்கும்
திரும்ப கொண்டுவரமுடியாது. photos
நான்
ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கரெண்ட்டை சரி செய்வதாக சொன்னார்கள்.
அவர்கள் எந்த தைரியத்தில் சொன்னார்கள் என்றால், கலைஞர் சென்ற ஆட்சியிலேயே
மின்தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து
வைத்தார். அதனை வைத்துதான் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இவர்களுக்கு சரியான
நிர்வாக திறமை இல்லாததால் அதை எதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர
முடியவில்லை.
கலைஞர்
90 வயதிலேயும் சக்கர நாற்காலிலேயும், ரயில் மூலமாகவும், வேன் மூலமாகவும்
மக்களை நேரில் சந்திக்கிறார். தளபதி சூறாவளி பிரச்சாரமாக ஊருக்கு ஊர்
செல்கிறார்கள். நமக்கு ஒரே தலைவர்தான். ஒரே தளபதிதான் என்றார்.மேலும் பேசிய குஷ்பு, அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அன்பழகன் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. அதனை அவர் எதிர்கொண்டார். தைரியமாக திமுகவுக்கு உழைத்தார். இப்போது உங்கள் முன்பு திமுக வேட்பாளராக நிற்கிறார்
திருச்சியில் போன எம்பி தேர்தலில் குமார் என்பவர் அதிமுக சார்பில் ஓட்டு கேட்டு வந்தார். நீங்களும் அவர்களுக்கு ஓட்டுபோட்டீங்க. திரும்பி அவரு உங்களை பார்க்க வந்தாரா... என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். இல்லை... இல்லை... என்றனர். உங்கள் குறைகளை கேட்டாரா... என்ற கேள்விக்கும் இல்லை... இல்லை... என்றனர்.
ஆனால் இப்போது திமுக சார்பில் போட்டியிடும் அன்பழகன், அடிப்படையில் கட்சிக்காரர். 10 வருடம் திருச்சி துணை மேயராக இருந்து உங்களின் பிரச்சனைகளை நேரடியாக வந்து கேட்கக் கூடியவர். அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
பிரச்சாரம் முடிந்து கிளம்ப தயாரான குஷ்புவை பார்த்து, பிரியாணி சாப்பிட வாங்க... பிரியாணி சாப்பிட வாங்க... என்றனர் அப்பகுதி பெண்கள். அன்பழகனை ஜெயிக்க வையுங்கள். இதே ஏரியாவுக்கு நன்றி தெரிவிக்க வந்துவிட்டு, உங்கள் வீட்டில் பிரியாணி சாப்பிடுகிறேன் என்று கிளம்பினார்.
செய்தி, படங்கள்: ஜெ.டி.ஆர்.
: ஜெ.டி.ஆர்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக