சனி, 12 ஏப்ரல், 2014

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி ! உலகப் புத்தகத் திருநாள் ! today


சென்னை, ஏப்.11- உலகப் புத்தகத் திருநாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரி டையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா-வுடன் இணைந்து, சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண் காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப்பயணம் ஆகியவை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து இன்று (11.04.2014) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களிடையே சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் புகழேந்தி, எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், பெரிகாம் பப்ளிக்கேஷன்ஸ் க.ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பக தி.வேணுகோபால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வீ.அன்புராஜ் ஆகியோர் கூறியதாவது:-
உலகப் புத்தக நாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு  தொடக்க விழா நடைபெறுகிறது. வார நாட்களில் புத்தகக் காட்சி பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும்.
இதில் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண்காட்சியுடன், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம், சான்றோர் பெருமக்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பினை வளர்க்கும் வகையில் சிந்தித்து தொண்டாற்றும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
200 புத்தக அரங்குகள்
தமிழக மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 100 தமிழ் நிறுவனங்களும், 35 ஆங்கில நிறுவனங்களும், 10 மல்டிமீடியா நிறுவனங்களும் பங்குபெறும் இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமத்தில் 200 அரங்குகள் இடம்பெறுகின்றன.
10% கழிவுடன் பல்துறைப் புத்தகங்கள்
இந்தக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. இப்புத்தகச் சங்கமத்தின் விற்பனை அரங்கத்தில் பகுத்தறிவு, இலக் கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளை யாட்டு, பொருளாதாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தலைப்பு களில் புத்தகங்கள் ஒரே இடத்தில் 10% கழிவுடன் கிடைக்கும்.
சிறப்புக் கழிவு 15%
உலகப் புத்தக நாளான ஏப்ரல்-23 அன்று (கூடுதலாக 5% கழிவு வழங்கப்பட்டு) 15% சிறப்புக் கழிவில் அனைத்து அரங்குகளிலும் புத்தகங்கள் கிடைக்கும்.
விழிப்புணர்வு நடைப்பயணம் (WALKATHON)
உலகப் புத்தக நாளான ஏப்ரல் 23ஆம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை புத்தக வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நடைப் பயணம் (WALKATHON)  நடைபெறுகிறது.
பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு (Workshop for Publishers) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பதிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்கள், புத்தக உருவாக்கம் மற்றும் விற்பனையில் உள்ள உத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறு கின்றன. இத்துறை சார்ந்த அறிஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வருகைதந்து பயிற்சி வழங்கு கிறார்கள்.
கலை நிகழ்ச்சிகள் & சொற்பொழிவுகள்
நாள்தோறும் மாலை 6 முதல் மனங்கவர் தமிழக நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.
ஏப்ரல் 18 - புத்தர் கலைக்குழு  வழங்கும் பறையிசை
ஏப்ரல் 19 - கட்டியக்காரி குழுவினர் வழங்கும் அவமானம் (நாடகம்)   (இயக்கம் - சிறீஜித் சுந்தரம்)
ஏப்ரல் 20 - சங்கி மங்கி (Talent Show)
ஏப்ரல் 21 - நந்தலாலா குழுவினர் வழங்கும் நகைச் சுவை பட்டிமன்றம் ஏப்ரல் 22 - புதுகை
பூபாளம் வழங்கும் நாகரீகக் கோமாளிகள் (Comedy Show)
ஏப்ரல் 23 - கலை அறப்பேரவை மு.கலைவாணன் வழங்கும் பொம்மலாட்டம்
ஏப்ரல் 24 - திருத்தணி பன்னீர்செல்வம் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி ஏப்ரல் 25  சுக பாவலனின் வயலின் இசை நிகழ்ச்சி
ஏப்ரல் 26 - தென்றல் கலைக்குழு வழங்கும் குழந்தை களின் நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
பதிப்பாளர்கள் பயனுள்ள வகையில் நாள்தோறும் மேடைகளில் தங்களின் நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் வாசகர்கள் சந்திக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு 7 மணிமுதல் பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் அறிவுமதி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், நடிகர் இளவரசன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் நெல்லை ஜெயந்தா போன்ற அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள் நடைபெறு கின்றன.
விருது வழங்கும் விழா புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களான பொள்ளாச்சி, நசன், பழங்காசு ப.சீனிவாசன், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் உள்ளிட்டோரைப் பாராட்டி 2014ம் ஆண்டிற்கான புத்தகர் விருதுகள் வழங்கும் விழாவும் 26.4.2014 அன்று நடைபெறுகிறது.
உலகம் முழுக்க நேரலை
இப்புத்தகச் சங்கமத்திற்கான தனி இணையதளம் www.chennaiputhagasangamam.com
என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இப்புத்தகச் சங்கமம் தொடர்பான       அனைத்துச் செய்திகளும், விவரங்களும், பயிற்சிகளில் பங்குபெறப் பதிவு செய்வதற்கான வசதி யும் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகச் சங்கமத்தின் நிகழ்வுகளை உலகம் முழுவதும் பார்க்கத்தக்க வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட வுள்ளது.
புத்தகக் கொடை விழா இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன், சுமார் ஒரு இலட்சம் புத்தகங் களைச் சேகரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பல்வேறு சிற்றூர் களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப் படும், புத்தகங்களை நன்கொடையாக வழங்குபவர் களுக்கு சிறப்புச் சலுகையுடன் கூடிய கூப்பன்கள் வழங் கப்படும். அதன் மூலம் அவர்கள் சிறப்புக் கழிவுடன் கூடிய புதிய புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறலாம்.
அதிரடி தள்ளுபடி அரங்குகள்
சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புகளுள் ஒன்றாக 50ரூ கழிவு மற்றும் சிறப்புக் கழிவில் புத்தகங்கள் விற்பதற்கென்று தனி அரங்குகளும் (Separate Book Stalls for 50% Discount and Special Discount Price) அமைக்கப்பட உள்ளன. சென்னை புத்தகச் சங்கம நிர்வாகம் பொறுப்பேற்று நடத்தும் இந்த அரங்குகளில் பல்வேறு முன்னணி நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள, மக்களிடம் போய்ச் சேரவேண்டிய முக்கிய நூல்கள் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 18 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி முடிய இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்வு சென்னை மக்களுக்கும், கோடை விடுமுறையை சென்னையில் கழிக்க வரும் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் நடைபெறும்.
பார்வையாளருக்கு சுத்தமான குடிநீர் தாராளமாக கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
புத்தகங்களை கடன் அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி வாங்கவும், IOB வங்கியின் நடமாடும் ATM மில் இருந்து பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
NTL Call Taxi    மற்றும் நம்ம ஆட்டோ நிர்வாகத்தினர் நியாயமான கட்டணங்களில் (அரங்கத்தால் நிர்ணயிக் கப்பட்ட) பார்வையாளர்களைக் கொண்டுவிட தயார் நிலையில் இருப்பார்கள். முதலுதவி சிகிச்சை வசதிகள் கொண்ட உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய நடமாடும் மருத்துவமனை ஒன்றும் செயல்படும். நுழைவுக் கட் டணம் ரூ.10/- மட்டுமே. 12 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. பார்வையாளர் களுக்கு நாள்தோறும் சிறப்புப் பரிசுகளும் உண்டு.
இப்புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி தந்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கண்காட்சியில் ரூ.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். ஆங்கிலம், தமிழ் என புத்தகங்கள் விற்பனை தனித்தனியாக வைத்துள்ளோம்.
பதிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை மத்திய பகுதியில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு :  சென்னை புத்தகச் சங்கமம்,  YMCA மைதானம், இராயப்பேட்டை,  சென்னை.
தொலைப்பேசி : 044- 2661 8161 / 2661 8162 / 2661 8163 மின்னஞ்சல் : நீலீமீஸீஸீணீவீஜீலீணீரீணீணீஸீரீணீனீணீனீரீனீணீவீறீ.நீஷீனீ
ஒருங்கிணைப்பாளர்கள் :
திரு. க.ஜெயகிருஷ்ணன் - 99401 15614
திரு. கோ.ஒளிவண்ணன் - 98400 37051
திரு. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் - 94442 10999
மேலாளர்: திரு. ப.சீதாராமன் - 98401 32684
மேலும் விவரங்களுக்கு : chennaiputhagasangamam.com

viduthalai.in

கருத்துகள் இல்லை: