செவ்வாய், 15 ஏப்ரல், 2014

Jeyalalitha: BJP தேர்தல் அறிக்கையில் தமிழக நலன் குறித்து எதுவும் இல்லை !


ஆரணியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த, கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா பாரதீய ஜனதாவிற்கு எதிராகவும் தனது தாக்குதல்களை தொடுத்துள்ளார்.
ஜெயலலிதா, பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் தமிழக நலன் குறித்து எதுவும் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பாரதீய ஜனதாவிற்கு அக்கறையில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இது. மத்தியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத ஆட்சி அமைய வேண்டும். இந்த தேர்தல் அண்டைய நாடுகளிடம் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல் என்று கூறியுள்ளார்.
ஏன் இந்த திடீர் காய்ச்சல் ? என்ன ஏமாற்றம் ?  dailythanthi.com

கருத்துகள் இல்லை: