புதன், 16 ஏப்ரல், 2014

கன்னியாகுமரியில் சோனியா காந்தி: இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவும்'


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.| கோப்புப் படம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.| கோப்புப் படம்.
இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும் என கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சோனியா காந்தி பேசியதாவது: "இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மற்ற அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், இலங்கை தமிழர் நலனுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தினார். காங்கிரஸை விட எந்த கட்சியாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்துள்ளது என்று கூற முடியுமா? இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து உதவிகள் செய்யும்" என்றார்.

பாஜக மீது தாக்கு:
பாரதீய ஜனதா கட்சி ஒரு தனி நபர் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்க நினைக்கிறது. எனவே நரேந்திர மோடி கைகளில் இந்திய தேசம் சென்று விடக்கூடாது என சோனியா பேசினார்.
காங்கிரசுக்கு மக்கள் பலம் இருக்கிறது
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படவில்லை. மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருக்கிறது. மக்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் பிரிக்க முடியாது என சோனியா கூறினார்.
காங்கிரஸ் சாதனைகள்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்து 40 கோடி மக்களை மீட்டுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.
தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரசின் சாதனை என்றும் இதுதவிர மகளிர் சுய முன்னேற்றத்திற்கு வித்திட்டதாகவும் கூறினார். நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு சட்டங்கள் பல இயற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: