சென்னை:நிபின்,
சீமா, மது, பாபா, ஸ்ரீராம்ராஜ் சுவாமிகள் நடிக்கும்
படம் ‘இது என்ன மாற்றம்‘. சத்திய நாராயணன் இயக்குகிறார். பி.கே.ஜேம்ஸ் தயாரிக்கிறார். இதன் ஆடியோ விழாவில் திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பேசியது: தயாரிப்பாளர்கள் 3 வருடம்கூட படம் எடுக்காமல் இருக்கலாம், நடிகர்களும் வருடக்கணக்கில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கலாம் ஆனால் தியேட்டர்களில் தினமும் காட்சிகள் காட்டியே ஆக வேண்டும். கண்டிப்பாக வாரா வாரம் படங்களை மாற்றியாக வேண்டும். தமிழில் வருடத்துக்கு 120 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 20 படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் மற்ற 100 படங்கள் சிறுபட்ஜெட் படங்கள். வருடம் முழுவதும் பெரிய பட்ஜெட் படங்களை நம்பி தியேட்டர் நடத்த முடியாது. இதைத்தான் எல்லா தியேட்டர்காரர்களும் சொல்கிறார்கள். சிறுபட்ஜெட் படங்கள்தான் திரை அரங்குகளை காத்துக்கொண்டிருக்கிறது. இப்படம் விஞ்ஞானமும், ஆன்மிகமும் இணைத்து எடுக்கப்பட்டதாக இயக்குனர் கூறினார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக