மின்வெட்டுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் சதி என்று ஜெயலலிதா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் மேலும் கூறுகையில்,
மின்சாரத்தை யாரும் தேக்கி வைக்க முடியாது. மின்சாரம் தண்ணீர் அல்ல, அணைகட்டு கட்டி தேக்கி வைப்பதற்கு. மின்சாரம் வெங்காயம் அல்ல. மூட்டையில் கட்டி வைப்பதற்கு. மின்சாரத்தை யாரும் சாக்குப் பையில் போட்டு எடுத்து போக முடியாது. மின்சாரம் உற்பத்தியான அந்த கணமே மக்களைப் போய் சேர வேண்டும். மின்சாரம் மக்களைப் போய் சேரவில்லை என்றால் மின்சாரம் உற்பத்தியாகவில்லை என்ற பொருளேயொழிய, யாரும் இதிலே சதி செய்ய முடியாது.
அதுவுமின்றி மின்சாரத்துறை அமைச்சர் அவருடைய (ஜெயலலிதா) நம்பிக்கைக்கு உரியவர். மின்சார வாரியத்திற்கு தலைவரை நியமிப்பது முதல் அமைச்சர். யார் சதி செய்கிறார்கள். சதி செய்கிறார்கள் என்றால் மின்வாரிய துறை அமைச்சரும், மின்வாரியத்துறை தலைவரும் என்ன செய்கிறார்கள். தூங்குகிறார்களா. என்ன சதி. இது நம்ம தலைவிதி. இதையெல்லாம் கேட்கணும்கிறது நம்ம தலைவிதி. இவ்வாறு கூறினார் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக