மன்சூர்
அலிகான் எழுதி இசை அமைத்து தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் அதிரடி.
ஆட்டம் ஆடி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடிகள் பற்றிய கதையான இப்படத்தின்
ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,‘
மன்சூர் அலிகான் எதையுமே தெரியாது என்று சொல்லமாட்டார். கேப்டன் பிரபாகரன்
படத்தில் நடிக்க வந்தபோது குதிரை ஏற்றம் தெரியுமா என்றேன். தெரியும்
என்றார். அவர் குதிரை மீது அமர்ந்து வரும் காட்சியில் நடிக்க சொன்னபோது
மன்சூர் தூக்கிவீசப்பட்டார். பிறகுதான் அவருக்கு குதிரை ஓட்ட தெரியாது
என்று சொன்னார். ‘முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்றபோது, ‘அப்படி சொன்னால்
என்னை படத்திலிருந்து தூக்கிவிடுவீர்கள் அதனால் பொய் சொன்னேன் என்றார். -
tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக