பா.ஜ.க.வின் இந்த விளம்பர பொறுப்பை ‘மடிசன் வொர்ல்டு’ என்ற நிறுவனம் ஏற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு எவ்வளவு செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது என்பதை ‘மடிசன் வொர்ல்டு’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. என்றாலும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவர் பா.ஜ.க.வின் செலவு பற்றி தகவல்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:–
நாடெங்கும் 15 ஆயிரம் விளம்பர போர்டுகளை 3 மாதத்துக்கு பா.ஜ.க. மேலிடம் முன்பதிவு செய்துள்ளது. இதற்காக மட்டும் ரூ.2500 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் 50 பத்திரிகைகள் தேர்வு செய்யப்பட்டு பா.ஜ.க. தினமும் விளம்பரம் கொடுக்கிறது. இதற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வார, மாத இதழ்கள் விளம்பரத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளனர்.
தொலைக்காட்சிகளில் தினமும் 2 ஆயிரம் தடவை பா.ஜ.க. விளம்பரங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை செலவாகும்.
இணைய தளம் மற்றும் எப்.எம். ரேடியோக்களில் விளம்பரம் செய்ய ரூ.35 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. டி–20 உலக கிரிக்கெட் போட்டியின்போது வெளியான பா.ஜ.க. விளம்பரங்களுக்கு ரூ.150 கோடி செலவிடப்பட்டது.
இந்த வழிகளில் மொத்தம் ரூ.4500 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் பா.ஜ.க. பிரசாரத்தில் பின் தங்கியுள்ளது. அந்த தொகுதிகளில் பிரசாரத்துக்கு ரூ.500 கோடி செலவிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
எனவே பா.ஜ.க.வின் பத்திரிகை, டி.வி. விளம்பரத்துக்கு மட்டும் பா.ஜ.க. ரூ.5 ஆயிரம் கோடி செலவிடுவது தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க.வுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி இத்தகைய விளம்பரங்களில் ஆர்வம் காட்டாமல் பின் தங்கியுள்ளது. காங்கிரசைவிட பா.ஜ.க.வினர் விளம்பரத்துக்கு மட்டும் 4 மடங்கு அதிகம் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
தோல்வி பயம் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் செலவு செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது. maalaimalar.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக