சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘மங்காத்தா’ படம், திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. அஜீத், த்ரிஷா, அர்ஜுன் நடித்துள்ள படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அஜீத்தின் 50&வது படமான இது, நேற்று முன்தினம், உலகம் முழுவதும் வெளியானது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளது.
இந்த படம், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அஜீத் நடித்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது. தமிழக தியேட்டர்களில் திருவிழா போன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து படம் பார்த்து வருகிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகர தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். பல தியேட்டர் அதிபர்கள் போலீஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளனர். அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ‘‘எனக்கு தெரிந்து, அஜீத் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் கலெக்ஷன் சூப்பராக உள்ளது. தியேட்டர் அதிபராக, என்னையும் கலெக்ஷனில் ‘மங்காத்தா’ சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக