வியாழன், 1 செப்டம்பர், 2011

நிமித்தக்காரனும் – நிமித்தமும் சகுனங்களையும், அப்போது நிகழும் நிகழ்வுகளையும்


nimitham நிமித்தக்காரனும்   நிமித்தமும்ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு.  கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பலன் கூறுவது பொதுவாக எல்லா ஜோதிடர்களும் கையாளும் முறை.  சிலர் சோழிகளை வைத்துப் பலன்கள் கூறுவர்.  இதற்குப் “பலகரை” ஆரூடம் எனப் பெயர். சிலர் கேள்விகேட்ப்பவர்களையே வெற்றிலை வாங்கிக் கொண்டு வரச்சொல்வர். அந்த வெற்றிலையின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பலன் சொல்லுவர். சிலர் கேள்வி கேட்பவர்களை 108 க்குள் எதாவது எண் சொல்லச் சொல்லுவர்.  அந்த எண்னை அடிப்படையாக வைத்துப் பலன்கள் கூறுவர்.  அந்தப்பலன்கள் சரியாக இருக்கும்.  “நம்முடைய எதிர்காலம் சோழியிலும், வெற்றிலையிலும், எண்களிலுமா இருக்கிறது” என எதிர்க் கேள்வி கேட்கலாம். இதெல்லாம் எதிர்வாதத்திற்கு ஆகுமே தவிர நடைமுறைக்கு  ஒவ்வாது.
சகுனங்களையும், அப்போது நிகழும் நிகழ்வுகளையும் (நிமித்தங்களையும்) வைத்துக் கொண்டு பலன் கூறுவது ஒரு முறை. நாம் நமது பாடத்தில் சகுனங்கள் எல்லாம் எதிர்
காலத்தைக் கூறும் அசிரீரி என எழுதி இருந்தோம். நிமித்தங்களும் அவ்வாறே. தற்போது நிகழும் நிகழ்வுகளை  சரியாக கணித்துப் பலன் கூறுவோமேயானால், நமது
பலன்கள் எல்லாம் சரியாக இருக்கும்.  இதற்கு ஜாதகம் தேவை இல்லை. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பலன் சொல்லும் திறன் மட்டும் தேவை. திரு. கிருஷ்ண மூர்த்தி
அவர்கள் நிமித்தத்தை வைத்து ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததையும், ஒருவருக்கு வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப முடியுமா என்று கூறியதையும், ஒருவருக்கு அழகில்லாத பெண் மனைவியாக வாய்ப்பாள் என்று கூறியதையும் விரிவாக தம் புத்தகத்திலே எழுதியுள்ளார்.  நாமும் நமது அனுபவம் ஒன்றைக் கீழே எழுதியுள்ளோம்.
நாம் நமக்கு வேண்டிய தம்பதியர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அந்தப் பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  “எனக்கு என்ன குழந்தை பிறக்குமென்று உங்களால் கூற முடியுமா?” என அந்தப் பெண்மணி கேட்டார். நாம் பதில் சொல்வதற்குள் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சிறு பையன் அந்த வீட்டிற்கு ஓடி வந்தான். நாம் பதில் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக, “பிறக்கப்போவது ஆண் குழந்தை” என்று தயக்கமில்லாது கூறினோம். அவ்வாறே அந்தப் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
சகுனங்களும், நிமித்தங்களும் எதிர்காலத்தைக் கூறும் அசிரீரிகள்.  நாம் அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு பலன் கூறினால், நமது வாக்குப் பலிதம் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: